Thursday, November 17, 2011

மெய்பொருள் – சித்தர் பாடல்கள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி

!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!

கடைசி பதிவில் சொன்ன மாதிரி மெய்ப்பொருளை அதாவது கண்மணியை பற்றிய பாடிய ஞானிகள், சித்தர்கள், மகான்கள் பாடல்களை தொகுப்பாக எடுத்து உங்கள் முன்பு குருவின் அருளினால் சமர்பிக்கிறேன்.

வள்ளலார் மற்றும் சித்தர்களின் திருவடி தவ முறையை அறியாதவர்களுக்கு, ஆன்மீகத்தில் உண்மையான தேடுதல் உள்ளவர்களுக்கு இங்கு கொடுத்திருக்கும் பாடல்களும் விளக்கங்களும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

இறைவனை நோக்கி நாம் வைக்கும் அடியில் இந்த வார்த்தை (திருவடி கண்) எல்லா சித்தர்களின் பாடல்களிலும், நாம் இறைவனை வழிபடும் இடங்களிலும் மேலும் நமது தமிழ் பழமொழியில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை பற்றியே பார்க்க போகிறோம்.

இங்கு எல்லா ஞானிகளின் பாடல்களிலிருந்தும் மற்றும் வள்ளல் பெருமானின் பாடல்களிலிருந்தும் இறைவன் திருவடி கண் தான், கண்மணி தான் என்பதை எடுத்து வைக்கிறோம். படித்து சிந்தித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

பாடல்களில் பிழைத்திருத்தம், தவறு ஏதாவது இருப்பின் திருத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்,
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே,
அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர்,
எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே,
இடதுகண்கள் சந்திரன், வலதுகண்கள் சூரியன்,
இடதுகண்கள் சக்கரம் வலக்கை சூல மான்மழு,
எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லீரோ” – சிவவாக்கியார்

எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே, மனம் ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே” – இடைக்காட்டுச் சித்தர் (8-சூரியன், 2-சந்திரன்)

எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல்,
கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்கலம்
,
கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும்
, விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம்” – பத்தரகிரியார்

வட்டவிழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக் கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்” – பத்தரகிரியார் [மெய்ஞ்ஞானப் புலம்பல்]

கண் நிறைந்த கணவன், மைய லழகீ ரூரோற்றி,
வைத்தீ ருளவோ மனையென்றேன்
, கையி னிறைந்த தனத்தினிந்தங்,
கண்ணி னிறைந்த கணவனையே
, மெய்யின் விழைவா ரொருமனையோ, விளம்பின் மனையும் மிகப்பலவாம்,
எய்யி லிடையா யென்கின்றா
,
ரிதுதான் சேடி யென்னேடி
” – திருவருட்பா

கண்ணே கண்மணியே கண்ஒளியே கண்ணுட் கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே” – திருவருட்பா 2096

பரமன் ஈன்றகண்ணே நின் தணிகைதனை கண்டு போற்றேன்” - திருவருட்பா 300

என் இரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி” – திருவருட்பா 550

கண்ணினால் உனது கழற்புதம் காணும் கருத்தினை மறந்து” – திருவருட்பா 1049

சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை என் மெய்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது” - திருவருட்பா 1278

தண்ணார் அளியது விண்ணோர் ஒளியது சாற்று மறைப்;
பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர் தீக்
;
கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டு கொள்ள
;
ஒண்ணா நிலைதொன்றுண்டே முக்கண்ணொடென் உள்ளகத்தே” –

திருவருட்பா 1383

கண்ணே அக்கண்ணின்மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே” – திருவருட்பா 1392

கண்ணின் மணிபோல் இங்குநிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றியதாம்; பண்ணின் மொழியாய் நின்பால்ஓர் பறவை வேண்டினம் படைத்தால்; மண்ணின் மிசையோர் பறவையதாய் வாழ்வாய் என்றார் என்னென்றேன்; எண்ணி அறிநீ என்கின்றார் இதுதான் சேடி என்னே டீ” – திருவருட்பா 1796

திருவருட்பா இரண்டாம் திருமுறையில் இங்கிதமாலை என்னும் தலைப்பில் இதுபோல் 100 பாடல்கள் உள்ளது. இங்கிதமாக சொன்னது இது, இதனை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது! சிந்திப்பவர்களுக்கே விடை கிடைக்கும்.

என் இருகண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார்தான் செய்வர்” – திருவருட்பா 2770

வள்ளலார் தன் இரு கண்களாலும் செய்தபெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! நமது மெய் எனப்படும் உடம்பில் விளங்கு கண் எனப்படும். இதல்லாமல் வேறு விளக்கு இல்லை என பெரியோர்கள் எல்லாரும் சொல்கிறார்கள் என வள்ளலார் சொல்கிறார்.

கண்ணே சரீரத்தின் விளக்குஎன இயேசுவும் சொல்வதை கவனியுங்கள்.

இறைவ நின தருளாலே எனைக் கண்டு கொண்டேன்;
எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன்றாக
உறைவது கண்டு அதிசயித்தேன்
” – திருவருட்பா 3051

காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்” – திருவருட்பா 3125

கண்ணிலே எனது கருத்திலே கலந்து கருத்தனே” – திருவருட்பா3557

அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்,
என்னிதய கமலத்தே இருந்தளுந் தெய்வம்,
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
,
தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம்,
சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்” – திருவருட்பா 3910

காணாத காட்சியெல்லாங் கண்ணிற்கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்” – காகபுசுண்டர்

கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்

நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுசுண்டர்

பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது
தனித்திரு பசித்திரு விழித்திரு
பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும்
ஆன்ம விள்க்கமே சுத்த ஆறிவு நிலை
கண்ணுலே நின் அடியார் தமையும் நோக்கேன்,
கண்மணிமாலைக் கெனினும் கனிந்து நில்லேன்
” – திருவருட்பா 1371

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
” – திருக்குறள்

வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்,
வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம்
,
இறையாத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம்,
கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே,
முட்டாத பூசையன்றோ என் குரு நாதன் மொழிந்ததுவே
” – பட்டினத்தார்

வாசிதனை பார்த்து மகிழ்ந்துனை தான் போற்றாமல்,
காசவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே;
உடலுக்குள் நீ நின்று உலாவினதை போற்றாமல்,
கடல் மலை தோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே;
எண்ணாத தூரமெல்லாம் எண்ணி எண்ணி
,
பாராமல் கண்ணாடிக்குள் ஒளிபோல் கண்டறிவதெக்காலம்
” – பத்ரகிரியார்

தொட்டவுடன் சுட்டுவிடும் எங்கள் பஞ்சாட்சரமே,
சுறு சுறுப்பும் உயிருள்ளதும் எங்கள் பஞ்சாட்சரமே
,
ஒட்டி ஒட்டாதேயுள் ஒங்கும் பஞ்சாட்சரமே
,
ஒது மறை வேதமெல்லாம் ஒலிக்கும் பஞ்சாட்சரமே
,
நீல மலையை நிஜதேவ தெய்வமதை
,
சேல் விழியில் கண்ட திருக்கட்சியை யான் மறவேன்
,
தோராத உச்சிவட்ட தேனாறு பாயுகின்ற
பார ரகசியத்தின் பழம் பொருளை யான் மறவேன்
,
சண்முகனும் நான்முகனும் சராசர பொருளனைத்துட்
என் முகத்தில் காட்டிவைத்த என் குருவை யான் மறவேன்
,
சாதிகுலம் பாராது தானிருந்த தெய்வமதை
பாதி மதி சூடி நின்ற பரம் பொருளை யான் மறவேன்
,
அண்ட பகிரண்ட மெல்லாம் தொண்டர் இதயத்தின் மனக் கண்ணாடிக் குள்ளிருந்த காரணத்தை யான் மறவேன்
” – மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்


தேவனுடைய ஆலயம் பூட்டும் சாவியும் இல்லாமல் இருக்கிறது” – ஏசு பெருமான்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவான் தம்மை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான் கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயமே
” – திரு ஞான சம்பந்தர்

ஆத்தானை எங்கள் அபிராம வல்லியை,
அண்டமெல்லாம் பூத்தானை மாதுளம் பூ
,
நிறத்தாளை புவியடங்க காத்தாளை
,
அங்கையிற் பாசாங்கு சமும் கரும்பும்
,
வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியை,
தொழுதார்க்கு ஒரு தீங்கில்லையே
அபிராமி பட்டர்

சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா, பேசும் பொற் சித்திரமே,
காணி நிலம் வேண்டும் பராசக்தி,
காணி நிலம் வேண்டும்,
ஒடி விளையாடு பாப்பா
, நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா

மகா கவி பாரதியார்

ஒடி ஒடி ஒடி ஒடி உட்கலந்த ஜோதியை,
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
,
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
,
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
;

அஞ்செழுத்திலே பிறந்து
, அஞ்செழுத்திலே வளர்ந்து,
அஞ்செழுத்தை ஒதுனின்ற பஞ்ச பூத பாவிகாள்
,
அஞ்செழுத்தில் ஒரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல்
,
அஞ்சல் அஞ்சல்லென்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
” – சிவ வாக்கியர்

பச்சை மாலை போல் மேனி பவள வாய்,
கமலச் செங்கண் அச்சுதா அமரர் ரறே
,
ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை
,
வரினும் வேண்டேன் இந்திரலோகம் ஆளும்
,
அச்சுவை பெரினும் வேண்டேன்
, அரங்கமா நகருளானே” – பெரியாழ்வர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்,
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
,
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
,
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” – சுந்தரணு பூதி

செத்திடமும் பிறந்திடமும் இனிச்சாகா,
திருந்திடமும் அத்தனையும் அறியாதார்,
அறியும் அறிவு எவ்வறிவோ,
ஒத்தை நிலம் ஒத்த பொருள் ஒரு பொருளாம்
,
பெரும் பயனை அத்தன் எனக்கு அருளியவார்
,
யார் பெறுவார் அச்சோவே” – மாணிக்க வாசகர்

உச்சிக்கு நேராய் உண்ணுக்குக்கு மேல் நிதம் வைத்த விளக்கு எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவியாமல் எரியுதடி வாலைப் பெண்ணே
கொங்கணவர்

இங் அங்கெண்ணாதபடி எங்கும் பிரகாசமாய் ஆணந்த பூர்த்தியாகி அருளோடு நிறைந்த அதுஎது?” – தாயு மாணவர்

சத்தியமே பராபரமே என்றே தெய்வம்,
சகல உயிர் ஜீவனுக்கு அது தானாச்சு
,
புத்தியினாலறிந்தவர்கள் புண்ணியோர்கள்,
பூதலத்தில் கோடியில் ஒருவருண்டு,
பத்தியினால் மனமடங்கி நிலையில் நிற்பார்,
பாழிலே மனதை விடார் பரம ஞானி,
சுத்தியே அலைவதில்லை சூட்சம்
,
சுழியிலே நிலையறிந்தால் மோட்சம் தானே” – அகஸ்தியர்

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே,
ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு
,
ஜோதியந்த நடுவீடு பீடமாகி
, சொகுசு பெற வீற்றிருந்தான் துரைபெண்ணாத்தாள், வீதியந்த ஆறு தெரு அமர்ந்த வீதி,
விளையாடி நின்ற திருமாளிகை கண்மாய்
,
பாதி மதி சூடியே இருந்த சாமி
, பத்து வயதாகு மிந்த வாமிதானே,
காமி வெகு சாமி சிவகாமிருபி
, காணரிது சிறு பிள்ளை கன்னி கன்னி, வாமியிவளை மர்மம் வைத்து பூசை பண்ண, மதியுனக்கு வேணுமடா அதிகமாக, ஆழிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர், அறிந்தாலும் மனமடக்கம் அறிய வேனும், நாமிவளை நினைத்தவாறு பூசை பண்ண, நாட்டிலே சொல்ல வென்றால் நகைப்பார் தானே” – கருவூரார்

நிழல் சாயா மெய்யுடம்பு பொய்யுடலில் எங்கே எட்டிரண்டான சஞ்ஜீவி அது எட்டாதவனை எட்டி மிதிக்கும் சஞ்ஜீவி
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள்

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்
பொருட் சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம்
சிற் சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்
;

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே ஞான நடத்தரசே என்னுயிர் நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்ததும் வம்மின் உலகியலீர் மரண மிலா பொருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

கண்டதெல்லாம் அனித்தியமே, கேட்டதெல்லாம் பழுதே, உண்டதெல்லாம் மலமே, உட்கொண்டதெல்லாம் குறையே, உலகியலீர் இது வரையும் உண்மை அறிந்திலரே, விண்டதினால் எண்ணில் நீர் சமரஸ சன்மார்க்க மெய்நெறியை
கண்டுபிடித்து மெய்ப்பொருள் நன் குணர்ந்து என்தகு சிற்றம்பலத்தே எந்தை அருளடைமின் இறைவாத வரம் பெறலாம் இன்புறலாமே எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி

திரு அருட்பா

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்,
கமலச் செங்கன் அச்சுதா அமரர் ஏறே
” – பெரியாழ்வார்

ஒமித்யேகாட்சரம் ப்ரஹம வயாஹரன் மாம்னுஸ் மரன்ய ப்ராயாதி த்விஜன் தேஹம் சயாதி பரமாம் கதிம்
( மரணகாலத்தில் இரு புருவ மத்தியில் ப்ராணன் முழுவதையும் வைத்து யார் என்னை நினைக்கிறார்களோ அவர்கள் என்னை வந்து அடைவார்கள் இது சத்தியம் ) பகவத்கீதை

வடலூரில் வாழும் சிற்றம்பலத்தே என் கண்ணின் மணியே,
கரு மணியே
, குரு மணியே, மாணிக்க மணியே, நடனசிகா மணியே,
நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே,
உடம்பினை பெற்ற பயனாவ தெய்வம் உடம்பினுள்
உத்தமனை காண்
ஔவையார்

நெல்லி இருக்குது காட்டுக்குள்ளே,
கருநெல்லி இருக்குது வீட்டுக்குள்ளே
,
பூட்டை திறப்பது கையாலே
,
மனப் பூட்டை திறப்பது மெய்யாலே
” – ஞானக்கும்மி

தண்முக துய்யமணி உண்முக சைவமணி ஷண்முக தெய்வமணியே, நடு இரவில் என் எழுப்பி பொருளுணவு தந்த தாயே” – வள்ளலார்

முத்தி வருந்தி நீ தேடு அந்த மூலம் அறிந்திட வா முத்தி வீடு,
எங்கும் சுயம் பிரகாசன் அன்பர் இன்ப இருதயத் திருந்திடும் வாசன்

கடு வெளி சித்தர்

திருவடி வைத்து திறம் அது பொருளென,
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
,
தெவிட்டா ஞான தெளிவையும் காட்டி
,
கடையில் சுழிமுனை கபாலமும் காட்டி
,
மூலாதாரத்தின் மூண்டெழும் கணலை காளலெழுப்பும் கருத்தரி வித்தே
,

அமுதே நிலையமும் ஆதித்தன் இயக்கமும்,
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
,
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
,
அணுவிற்கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்
,
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
,
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
,
நெஞ்சில் குடி கொண்ட நீலமேனியும்
” – ஔவையார்

நெற்றியில் இயங்குகின்ற நீலமாம் விளக்கினை உய்த்துணர்ந்து பாரடா உள்ளிருந்த ஜோதியை” – சிவ வாக்கியர்

மூலத்துதித் தொழுந்த முக்கோண சக்கரத்துள் வாலை தனை போற்றாமல் மதி மறந்தேன் பூரணமே” – பட்டிணத்தார்

தலையுடன் உடல் கால் கரம் வேறதாய் நிலை வணக்க பெருந்தவ மாமிது அலை வறுத்து அரங்கம் புகுந்தவர் மலையரன் மகள் மணவாளரே” – சாலை ஆண்டவர்கள்

போக்கும் வரவும் புறம்பும் உள்ளுமாகி நின்று தாக்கும்
ஒரு பொருளை சந்திப்பது எக்காலம்
;

வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல கூடு விட்டு
பாயும் குறிப் பறி வதெக்காலம்
;

ஒட்டாமல் ஒட்டி நிற்கும் உடலும் உயிரும்
பிரித்தே எட்டா பழத்துக்கு இங்கு ஏனி வைப்பது எக்காலம்
” – பத்ரகிரியார்

சாகாமற் கற்பதே கல்வி தனை பிறர் ஏவாமல் உண்பதே உண்
ஔவையார்

நீ மீண்டும் பிறவாவிட்டால் பரலோக சாம்ராஜ்யத்தை அடைய முடியாது
ஏசு பெருமான்

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்,
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளரில்
,
காற்றை பிடிக்கும் கணக்கறிவாளர்க்கு
,
கூற்றை உதைக்கும் குறி அதுவாமே
” – திருமூலர்

தூணை சிறுதுரும்பாக தோன்றிட செய்வோம்,
துருபபை பெருந்தூணாக தோற்ற செய்குவோம்
,
ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் ஆக செய்குவோம்
,
ஆரவாரித்து எதிராய் ஆடு பாம்பே
,
எட்டு நாகம் தன்னை கையில் எடுத்து ஆட்டுவோம்
,
இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவோம்
,
கட்டுக் கடங்காத பாம்பை கட்டி விடுவோம்
,
கடும் விஷம் தன்னை கக்கி ஆடு பாம்பே
” – பாம்பாட்டி சித்தர்

வேறக தானிருந்த வண்ணம் சொல்வேன்,
வேண்டியே கைவேறு கால்வேறய்
,
நேராக உடல் வேராய் தலை வேராய்
,
நேர்மையுடன் பூமி தனில் சித்து
” – போகர் 7000

காலனை காலால் உதைத்தவளாம்,
வாலை ஆலகால விஷமுண்டவளாம்
,
மாளா ஜெகத்தை பதைத்தவளாம்
,
இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம்
” – கொங்கணவர்

காவு கொடுவோர்கள் வினை காலனை,
காலன் அணுகாதபடி காலனை காலாலுதைத்த கருணேசா

ஸ்ரீ காக புசுண்டர்

அல்லல் வாசல் ஒன்பது, அறுத்தடைந்த வாசலும்,
சொல்லும் வாசல் ஒர் ஐந்துமே
, சொம்மி விம்மி நின்றதும்,
நல்ல வாசலை திறந்து
, ஞான வாசல் ஊடு போய்,
ஆட்டு காலிரண்டினுள்ளே
, அமர்ந்திருப்பதெக்காலம்” – பத்ரகிரியார்

உன் நினைவெண்னும் ஆகாயத்துள் அவர்க்கம் கட்டப் பெறுகிறது; நெருப்பாறு மயிர் பாலம் உள்ளொளி பெருக்கி உவப்பிலா ஆனந்தமாய் ஞானப் பால் உறிஞ்சணும், சிற்சபையில் புகுந்தருணம் இதுவே; ஆலய பிரவேசம் தெய்வ தேடு கூடகம், சாலை கழுவி வீட்டுக்குள் செல்லுதல்

இந்த எல்லை உலகத்தை எல்லாம் விழுங்கி நிற்கின்ற எல்லை இதன் பெயர் மெய்ந்நகரம். இந்த மெய்குருபிரானைசந்தித்தால் மறுபிறப்பு என்னும் தேவபிறப்பில் ஆக்கி உயிர்ப்பித்து எழுப்புவார்கள்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தன மனதில் ஏற்படும் அணைத்து சந்தேகங்களுக்கும் விடையை சித்தர் பாடல்களிலே காணலாம். எல்லா சித்தரும் ஞானம், வைத்தியம், ஜோதிடம், மந்திரம் இன்னுமுள்ள எல்லா கலைஞானம் பற்றியும் கூறியிருக்கிறார்கள். இவற்றிலெல்லாம் உலகத்திலே தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடே தமிழில் உள்ளதுபோல ஞான நூல்கள் உலகில் வேறு எங்கும் இல்லை என உறுதியாக சொல்லலாம். இந்த ஞானக்கடலில் மூழ்கி நன்முத்துகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. சிந்தையை தெளிப்பது சித்தர்கள் நூற்களே . சிந்த தெளிய சித்தர்கள் நூலைப் பாருங்கள்! பார்த்தால் பசிதீரும் - பார்த்தால் - அமுது கிடைக்கும். பேரின்பம் அடைவீர்கள். மரணமில்ல பெருவாழ்வு வாழலாம்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
மதிவாணன்


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...