Thursday, November 10, 2011

மெய்ஞான இணையதளம்!
நல்லதொரு மெய்ஞான இணையதளம்! என்னால் முயன்ற வரை இறை தத்துவத்தை குடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் குருவின் அருளால்.

இரகசியம் இரகசியம் என மறைக்கப்பட்ட ஞானம் இங்கே பரசியம்! யாவரும் அறியலாம்!

இந்தியாவில் நிலவும் சனாதன தர்மம்!
வள்ளலார் உரைத்த சன்மார்க்கம்!
சித்தர்கள் ஞானிகள் கூறிய ஞானம்!
உலகர் யாவருக்கும் பொதுவான நெறி!
ஜாதி மத இன பேதமற்ற தர்ம வழி!
உன்னை அறிய! உணர! ஒரு பாதை!
இறைவன் எங்கே? அறியலாம்! வாங்க!
சுருதி வாக்கியம் அறிய வாருங்கள்!
யுக்தியினால் பரிபாஷை விளங்க வருக!
ஞானம் மட்டுமே இங்கு உபதேசம்!
இறைவன் உரைத்த ஞானம் சும்மா இரு”!
உன்னுள் உன்னைக் காண சும்மா இரு”!
உன்னை கண்டு இறைவனை காண வழி!

ஆன்ம பசியுள்ளவரே வருக!
தனித்திருக்க விரும்புவோரே வருக!
விழிப்புணர்வு பெற விரைந்து வருக!

இந்த இணையதளம் மூலமாக
எல்லோரும் உணர வேண்டுவதற்காகவே அடியேன் இந்த இணையதளம் மூலம் ஞான தானம் செய்கிறேன் சற்குருவே துணை!

ஆன்மநேய ஒருமைப்பாடுடயீர்!

"ஞானம்" தேடும் நல்ல உள்ளங்களே !

"நான் யார்", என அறிய விரும்புகிறீர்களா ?

"உண்மை அறிவு" பெற ஆசையா ?

"மெய்பொருள்" உணர வேண்டுமா ?

"பிரபஞ்ச இரகசியம்" தெரிய வேண்டுமா ?

"கடவுளை காண உணர" விருப்பமா ?

"ஆன்மா" பற்றிய தெளிவான விளக்கமா ?

இவைகளை அறிய உணர விருப்பம் உள்ளவர்கள் உங்களை கண்மணிமாலை இணைய தளம் அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறது.

இதுவரை இந்த உலகில் ரகசியம் ரகசியம் என மறைக்கப்பட்ட விஷயங்கள், திருவருட் பிரகாச வள்ளலார் மற்றும் பல சித்தர்கள் ஆசியால் , “கன்னியாகுமரிவாலை உலகன்னை பகவதியம்மன் அருளால் எமது ஞான சற்குரு, அவர்கள் எல்லோரும் அறிய இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்! உலகம் சுபிட்சமடைய வேண்டும். இதுவே ஒரு குறிக்கோள்! இலட்சியம்!

எமது ஞான சற்குரு மட்டுமே வள்ளல் அருளால் இரகசியங்களை பரிபாஷைகளை விளக்கி நூற்களாகவே வெளியிட்டுள்ளார் !

எல்லோரும் ஞானம் பெற வேண்டும்! மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் .

எமது கண்மணிமாலை இணைய தளம் உங்கள் வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் .

ஜாதி, மத, இன பேதமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம் ! அருள் பெறலாம் !

மாதா பிதாவை பெற்ற நீவிர் ! உடலை தந்த மாதா பிதாவை போற்றும் நீவீர் , நம் உடலுக்குள் உயிரை தந்த இறைவனை உணர வேண்டாமா ? அடைய வேண்டாமா ?

உடலுக்கும், உயிருக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்பதை அறிவிப்பவர் உணர்த்துபவர் தான் "குரு"! அப்படிப்பட்ட ஒரு குருவை தேடுங்கள்.

எத்தனையோ ஞானிகள் இந்திய புண்ணிய பூமியிலே!. உரைத்த ஞானமோ ஒப்பற்றது !. இறை உண்மை ! சத்தியம்!.

ஆனால் புரிந்து கொள்பவர் அரிதினும் அரிதாகவே உள்ளனர்!. படித்து அறிய இந்த பிறவி போதுமா ?

குருவிடம் பாடம் கேட்டு, குருவிடம் உபதேசம் பெற்று . ஞான தீட்சை பெற்றாலே உண்மை புரியும்! குருவருளின்றி திருவருள் கிட்டாது

நாம் நடமாடும் கோயில் என்பதை நமக்குள் உயிராக, ஆத்மாவாக பிராணனாக எல்லாம் வல்ல எங்கும் நிறைந்த இறைவனே இருக்கிறான் என்பதை தீட்சை பெற்று உணர்ந்து கொள்ளலாம் ! வாரீர் ! வாரீர்!

குரு உபதேசம் உண்மை விளக்கம் !

குரு தீட்சை அனுபவ பாடம் !

கண்மணிமாலை இணைய தளம் உலகுக்கு ஞானம் வழங்க காத்து இருக்கிறது !.

குருமார்கள் பலர் உள்ளனர் !
சீடன் ஒருவரகாவாவது உள்ளாரா?
ஞானிகளை துதிபாடி பலனில்லை !
ஞானிகள் உபதேசப்படி நடப்பதே நன்று !

இரகசியம் இரகசியம் என மறைத்தவன், மறைப்பவன்
உலக நலனில் அக்கறை இல்லாதவனே !

குரு உபதேசத்தை மீறி உலகமே மோட்சம் பெற தான் பெற்ற மந்திர உபதேசத்தை பாரறிய் பகர்ந்தாரே "இராமனுஜர்" அவர் தான் எங்கள் குரு!.

உலகமே மரணமில்லா பெருவாழ்வு பெற விரும்பி ஜாதி மத இன பேதமற்று சன்மார்க்கம் போதித்து எல்லோரும் ஞானம் பெற அழைத்தாரே திருவருட்ப்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர் தான் எங்கள் குரு !

யாதும் ஊரே ! யாவரும் கேளீர் !
எல்லோரும் ஞானம் பெற வாரீர் !
கண்மணிமாலை இணைய தளத்திற்கு !
விரிவாக பார்க்க நூற்களை பாரீர் !

ஞான சற்குரு அதற்காகவே ஞானிகளின் பரிபாஷைகளை உடைத்து தெளிவாக விளக்கமாக பற்பல நூற்களை வெளி இட்டு இந்த உலகுக்கு பணி செய்துள்ளார்கள் !

கதை கேட்டு பயனில்லை !
கருத்தை அறிய முயலுங்கள் !

ஞானம் குறிபிட்ட சாதிக்கோ , குறிபிட்ட மதத்திற்கோ , நாட்டிற்கோ சொந்தமில்லை ! உலக மக்கள் அனைவர்க்கும் , ஒரே கடவுளான அந்த ஒளியான தெய்வத்தின் சக்தியை அறிய உணர வாய்ப்பிருக்கின்றது !
தேடுகிறவர்கள் "கண்மணிமாலை இணையத்தளத்தில்" கண்டடைவார்கள் !

தேடுங்கள் உங்கள் இரு உதய கதவுகளை திறக்க "கண்மணிமாலை இணையதளம்உதவும் வழிகாட்டும் !. விழிக்காட்டும் குரு கிடைப்பார் !. கேளுங்கள் ஞானசற்குரு அவர்களிடம் "ஞான தீட்சை" கிடைக்கும் !.

கண்ணான கடவுளை கண்டு உணர "கண்மணிமாலை இனைய தளம்" வழிகாட்டும் !

வாழலாம் ! வாழ்வாங்கு ! வாழலாம் ! வாரீர் ! மரணமில்லா பெருவாழ்வு பெறவே !

3 comments:

Anonymous said...

Valgha Valamudan,
Anbar Maruthapillai

Balu said...

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.Please follow(First 2 mins audio may not be clear... sorry for that)

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

My blog:
http://sagakalvi.blogspot.com/

Mathivanan said...

மிக்க நன்றி பாலு.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...