Sunday, November 6, 2011

ஞானதானம் செய்க!

“தானமும் தவமும்” தான் மிக மிக அரிதான செயல் என ஔவையார் கூறியதை சிந்திக்கவும்!

அரிதான மானிட தேகம் பெற்ற நாம் அதி உன்னதமான தானமும் தவமும் செய்தாலே அரிதினும் அரிதானது!

எல்லாம் வல்ல இறைவன் – எங்கும் நிறைந்த இறைவன் நம்மிலும் இருக்கிறார்!

மனித தேகத்தில் கண்ணில் ஒளியாக இறைவன் நின்று அருள்பாலிக்கிறார்!

எல்லா ஞானிகளும் உலகத்தவர்களுக்கு உரைத்த சத்தியம் இதுவே!

இம்மாபெரும் உண்மையை, இதுவரை உலகத்தவர் உணராது மறைத்து விட்டனர் பலர்!

உலக மக்கள் படும் துயர் கண்டு வருந்தி, பிறவிப் பிணியிலிருந்து மக்களை மீட்க, எல்லோருக்கும் ஞான பாதையை எளிதாக உபதேசித்து அருளினார் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள்!!

எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!

நாம் எல்லரும் அவர் பிள்ளைகளே!

இறைவன் ஜோதிஸ்வரூபன்!

சரியாக விரதம் இருந்துதான் போகணும்!

சிரமம் பாராது இறைவா என இருக்கணும்!

நல்ல ஆகாரம் நல் ஒழுக்கம் வேணும்!

எல்லாரையும் இறைவனாகவே கருதனும்!

எந்த பேதமும் யாரிடமும் பார்க்கக் கூடாது!

சன்மார்க்கமே சபரிகிரீசன் வழி!

வாழ்க சன்மார்க்க நெறி!

ஞான நூற்களை தானம் செய்க!

தானத்தில் சிறந்தது ஞான தானமே!

வாழ்க வளமுடன்!
மதிவாணன்

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...