Sunday, November 6, 2011

மனிதனாகுக!
உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வது மட்டும்தான் மனிதனின் வேலையா ? மிருகங்களும் இதைத்தானே செய்கிறது!

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! என ஔவையார் கூறியது எதற்க்காக? அறிய வேண்டாமா?

குறைவின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா?

பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு-பகுத்தறிவு உள்ளவன்- மனிதன் என்று கூற முடியுமா?

மனிதன் என்பவன் யார்?

மனதை இதம் செய்ய – பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்! அதற்குத்தான் பகுத்தறிவு!

எப்படி பக்குவபடுத்துவது?

இதை சொல்லித்தரும் குருவை தேடு!

நாம் சாகப் பிறக்கவில்லை!

வாழ பிறந்திருக்கிறோம்!

எப்படி வாழவேண்டும்?

பஞ்சமா பாதகங்கள் பொய் – கொலை – களவு – கள் – காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் – ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்!

மீன், முட்டை, இறைச்சி உணவுகளை உண்ணாதே! உடலை கெடுக்காதே!

மது, புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே!

நோய்க்கு இடங்கொடேல்!

எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!

எப்போதும் உண்மையே பேசு!

“ஒருவனுக்கு ஒருத்தி” என வாழு!

மண், பெண், பொருள் ஆசையை விடு!

இறைவன் திருவடியில் சரண் புகு!

அப்போதுதான் நீ மனிதனாவாய்!

சிந்திப்பவனே மனிதன்:

பினாமி பெயரில் பூமியிலே சொத்துக்களை வாங்கி குவிக்கும் கனவான்களே, சுனாமி வந்தால் கண் இமைக்குமுன் கைலாசம் போய்விடுவீர்கள். “மரக்கறி உணவே மனிதகுல உணவு”. காய்கறி, கனி உண்டு வாழ்ந்தாலே நமக்கு கனிவு பிறக்கும். சக்தி பிறக்கும். சாத்வீகமே, அன்பே, கருணையே நம்மை கடவுளிடம் சேர்பிக்கும். அறிவை மயக்கும் மது, புகையிலை வகையறாக்களை தவிர்ப்பதே அறிவுடைமை!

“பரிபூரண அறிவே ஞானம்”

“கொல்லான், புலாலை மறுத்தானை கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்”

அன்பும் பண்பும் உள்ளவனிடமே அறிவு இருக்கும். அறிவுள்ளவனே மனிதன். இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை! நமக்கு எட்டுகிற இடத்தில்! எட்டாக – இரண்டாகவே உள்ளான்! நாம் அவனை எட்டிப்பிடிக்க வேண்டும்! தட்டிப் பாருங்கள் உணர்வால்! சிந்தனையை தட்டி சிறகடித்து பறக்காமல் சிந்தனையை அடக்கி “சும்மா இருக்க” வழி பாருங்கள். விழியை பாருங்கள்! விழித்திருந்து தான் பார்க்க வேணும்! கண்ணை மூடினால் மரணம். கண்ணாடி போன்ற நம் கண்ணே எந்தப் பற்றுமின்றி நம் இறைவனான ஆத்மாவை சுமந்து கொண்டுள்ளது. கண்ணின் மணியை கருதிப் பார்ப்பதே ஞானம் பெற வழி பசித்திரு, தனித்திரு, விழித்திரு.

கண்ணின் மணியில் கலந்து ஒளியாய் நின்ற அவனே நம் கண்கண்ட தெய்வம். முதலில் நாம் காணவேண்டிய தெய்வம். கண்ணாடி கண்டு தொழுதால் கலி தீரும். கண்ணாடி போன்ற கண்ணை கண்டு அதில் துலங்கும் ஒளியை தொழுதால் கலியாகிய நம் இருவினைகளும் தீரும்.

பிறவியாகிய பிணி நீங்க – நம் இரு வினைகள் அகல வேண்டும். அதற்கு கண்ணில்-மணியில் – ஆடும் ஜோதியை உணர்ந்து சும்மா இருப்பதுவே ஒப்பற்ற ஞான வழி. சும்மா இருப்பதுவே சுகம். சாமியார்களின் உபதேசங்களை விட்டுத்தள்ளுங்கள். நம்மை நாம் உணர, சாமியே சொன்ன உபதேசம்! வழி!செயல்படுங்கள்.

சனகாதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்து இறைவன், இருந்ததனை இருந்தபடி இருந்துதானே உணர்த்தினார்! சொல்லாமல் சொன்னவரை, சும்மா இருக்க சொன்னவரை, உணர்த்தியவரைத் தான் நாம்தொடரவேண்டும். முருகப்பெருமானே அருணகிரிநாதருக்கு

உபதேசித்தது, சும்மா இரு என்று தானே!

ஆறாயிரம் திருவருட்பாக்களை பாடி ஆறாகவே இரும் என நமக்கு சொல்லி விழியை இன்றும் உணர்த்தும் வள்ளலார் முதல் பாடலே சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ என்று தானே!

எனவே சும்மா இருங்கள்!


வாழ்க வளமுடன்!

மதிவாணன்

3 comments:

Anonymous said...

Excellent.Thought Provoking.Sinthanaiki Nannragha Ettumara Vilakki Uliyergal.
Valgha Valamudan,
Maruthapillai/Malaysia

Mathivanan said...

நன்றி மருதமலை அய்யா.

vijayan said...

Excellent work. Please keep posting.

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...