Thursday, February 23, 2012

வாழ்வாங்கு வாழலாம்!

சமரச சன்மார்க்கம்
"வாழ்வாங்கு வாழலாம்"


ஆன்மநேய ஒருமைப்பாடுடையீர்,


வந்தனம்! எண்ணிலடங்கா ஞானிகள் தோன்றிய இந்தியா புண்ணிய பூமியில் பிறந்த நாம், தமிழ்நாட்டில் பிறந்த நாம், மனித உருவில் பிறந்த நாம் நிச்சயம் புண்ணிய ஆத்மா தான்! அதிலும் எக்குறையுமின்றி, மானிடராக பிறந்த நாம் பிறந்த பலனை அடைய வேண்டாமா?

ஏன் பிறந்தோம்? எதனால் வாழ்கிறோம்? எப்படி வாழவேண்டும்? எங்கிருந்து வந்தோம்? நமது பிறப்புக்கு முன்னால் நம் பெற்றோர், அவர்கள் பெற்றோர்கள் பிறந்தார்கள் – பெற்றவர்கள் – வாழ்ந்தார்கள் – வீழ்ந்தார்கள்? நாம் பிறப்பதற்கு முன்பும் உலகம் இருந்தும் நம் அப்பா, தாத்தா மற்றும் மூதாதையர்கள் வாழந்தனரே?!

நாம் இறந்த பின்பும் நம் மகன் நம் பேரன் நம் மகனின் பேரனும் வாழத்தான் போகிறார்கள்?! இப்படியே போகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் நாம் இருப்பது, பூரண ஆயுள் என்றால் 120 வருடந்தான்?! ஆனால், இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியால் மனிதன் கூடாத பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, மாமிச உணவு உண்டு கிட்டத்தட்ட மிருகமாகவே வாழ்கிறான்!? இப்படிப்பட்ட மாக்களின் வாழ்வு அற்ப ஆயுளே! 70 வயதை தாண்டுபவர் அரிதிலும் அரிதே!

“பாவிகளே மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது” இது பைபிள் வாசகம். இவ்வாசகமே இந்து மத வேதங்களும் கூறும் உண்மை!? மனிதன் பிறப்பது பூர்வஜென்ம பாவ புண்ணிய கர்ம வினைப்படிதான் என்பதே உண்மை! சத்தியம்! வேதவாக்கு! பாவ புண்ணிய வினைப்படி பிறந்த மனிதன் பாவி தான்! பைபிள் கூறுவதும் உண்மைதான்! எல்லா ஞானிகளும் கூறும் உண்மை இதுவே!

கர்மவினை ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது! அவரவர் வினைக்கேற்ப அவரவர் பிறப்பும் வாழ்வும் அமைகிறது?! யாருடைய கர்மமும் யாருக்கும் வராது! “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்!” முந்தின பிறவிகளில் பட்ட கடன் வசூலிக்கவே இந்த பிறவியில் பிள்ளையாக, சொந்த பந்தங்களாக வந்து சேர்கிறார்கள்?! கடன் வசூலானதும் விட்டு நீங்கி விடுகிறார்கள்! அப்பனுக்கும் பிள்ளைக்குமே சம்பந்தமில்லை!? இது தான் வாழ்வு! இதுவே விதிக்கப்பட்ட கர்மம்! சுருக்கமாக “விதி” என்றனர் ஆன்றோர்.

இறைவன் அருளால் தான் நாம் பிறந்தோம்! இறைவன் தான் உலக மக்கள் அனைவருக்கும் அப்பா அம்மா – அம்மையப்பன் ஆவார்! நமக்கு உடல் கொடுத்தது நம் தாய் தந்தை பூர்வ ஜென்ம பந்தப்படி! உயிர் கொடுத்தது இறைவன்! கருணையே வடிவான கடவுள் நாம் உய்வடைய நமக்கு கொடுத்த ஒரு வாய்ப்பு இம்மானுடப் பிறவி! இப்பிறவியிலேயாவது இவன் உருப்படுகிறானா பார்ப்போம் என நம்மை பிறப்பித்தார்!? அம்மையப்பன்!

கர்ம வினையால், உலக மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம் தான்! உடலால் ஆண் பெண் என இரண்டாக பிரித்த இறைவன், உயிரால் ஒன்றாகவே உள்ளான்! உலக மக்கள் அனைவரும், ஆத்மாக்கள் அனைவரும் எல்லாம்வல்ல அந்த இறைவனின், பரமாத்மாவின் அம்சமே! கர்மாவால் வித்தியாசப்பட்ட மக்கள் அனைவரின் ஆத்மாவும் – உயிரும் – ஜீவனும் ஒன்றே! வித்தியாசம் கர்மாவால் நமக்குள்ளேதான்! இறைவன் ஒருவரே! பரமாத்மா! அவரே ஜீவாத்மாவாக எல்லா உயிராகவும் துலங்குகிறார்!

உலக மாந்தரே, வினைகளால் வேறுபட்ட நாம் ஆத்மாவால் ஒன்றானவர்கள் என்பதை உணர வேண்டாமா?! ஒன்றான நம் ஜீவனை உணர தடையான நம் பாவ வினைகளை அகற்ற பாடுபட வேண்டாமா?! உலகில் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லித்தர ஒவ்வொருவருக்கும் ஒருவர் தேவையல்லவா? நாம் பிறந்ததிலிருந்து அம்மா அப்பா உற்றார் சுற்றம் இப்படி பலரும் பலதயும் சொல்லித்தானே, பேசாமல், எதுவும் தெரியாமல் புரியாமல் பச்சை மண்ணாக நாம் வளர்ந்தோம்?! வாழ்கிறோம்? “அழ மட்டுமே தெரிந்த குழந்தையாக பிறந்த நாம், அழுது அழுது தான் ஞானக்குழந்தையாக வேண்டும்” என நம்மை எவ்வளவு அற்புதமாக படைத்திருக்கிறார் கடவுள் பாருங்கள்?!

நமக்கு உயிர் தந்த இறைவனை, நம் உயிராகவே இருக்கும் இறைவனை, நாம் அறிய வேண்டாமா? உணர வேண்டாமா? நம் பிறப்பின் நோக்கமே இது தானே!? நாம் பிறந்தது இனி பிறாவாதிருக்கவே! பிறந்த இப்பிறப்பில் தானே இறவாதிருப்பதே! மரணமிலாது வாழ்வதே! என்றும் இருப்பதே! சிரஞ்சீவியாவதே! எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரே இறைவன் போரோளியானவர் தானே! அந்த பேரோளியான பரமாத்மாதான் நம் ஆத்மாவாக, சிற்றோளியாக, நம் உயிராக நமக்குள் துலங்குகிறார்! உண்மைதானே!

எங்கும் நிறைந்த இறைவன், ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஒளிரும் இறைவன், நம் உடலில் தலையில், உள்ளே மத்தியில் நம் உயிராக – ஒளியாக மிளிர்கிறார்!? இதுவே வேதங்கள் எல்லாம் கூறும் உண்மை!! சிரநடு உள் ஒளிரும் அந்த இறைவன் நம் இருகண்களிலும் வெளிப்பட்டு அருள்கிறார்! “கண்ணே சரீரத்தின் விளக்கு” இது பைபிள் கூறுவது! “மனித தேகத்தில் கண்ணில் புகையில்லாத ஜோதியாக துலங்குகிறான் இறைவன்” இது கடோநிஷத்து கூறும் இரகசியம்!

எல்லோரும் மறைத்து வைத்த இந்த இரகசியங்களை, சத்தியத்தை திருவருட்பிரகாச வள்ளல் அருளால் எல்லோரும் அறிய சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் உரைகிரார்கள்! எல்லோரும் ஞானம் பெறட்டுமே! எல்லோரும் பிறந்த பலனை அடையட்டுமே! எல்லோரும் இறைவனடி சேரட்டுமே! என்ற உயர்ந்த நோக்கமே வள்ளலாரின் இலட்சியம்! “வம்மின் உலகியலீர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்” என உலக மக்கள் அனைவரையும் கூவி அழைக்கிறார்!.

எந்த விஷயத்தையும் சொல்லித் தர ஒரு ஆள் வேண்டும் என்ற போது, இந்த ஒப்பற்ற ஞானத்தை சொல்லித் தர ஒரு ஆள் வேண்டாமோ?! இந்த ஞானத்தை, நாம் யார் என அறியும் அறிவை போதிக்க நமக்கு அவசியம் ஒருவர் வேண்டும்! அவரே “குரு”! உலக மக்கள் ஞானம் பெற உலகில் நான்கு வேதங்கள், பைபிள், குர் ஆன், திருமந்திரம், திருவருட்பா என எண்ணிலடங்கா ஞான நூற்கள் உள்ளன! எல்லா நூற்களும் ஒரே இறைவனை, பேரொளியை அடையவே வழிகாட்டுகின்றனர்!

சொல்லித்தர ஒரு குரு இருந்துவிட்டால் கேட்க நாம் தயார்தானே! அறியாமல் இருக்கும் நமக்கு அறிவிக்க வருபவர் தானே ஞானகுரு! அறியாமை இருளை அகற்றி நம்முள் ஞான ஒளியேற்றுபவரே ஞானசற்குரு! வாருங்கள்! கன்னியாகுமரிக்கு தங்க ஜோதி ஞான சபைக்கு!

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்ததால் ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள். வயிற்றுபசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே!! உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே! அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்.

வள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே” என ஒன்றுபடுவதே! வள்ளலார் உரைத்த “சன்மார்க்கம்”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயலுவதேயாகும்! “முயற்சி திருவினையாக்கும்”!

நான்கு வேதம் புகழ்வது சமரச சன்மார்க்கம்!

பைபிள் கூறுவதும் சமரச சன்மார்க்கம்!

குர்ஆன் உரைப்பதும் சமரச சன்மார்க்கம்!

திருமந்திரம் திருவாசகம் திருவருட்பாவும் இதுவே!

“எல்லோரும் கூறுவது எல்லோரும் வாழவே”!

----ஆன்மீக செம்மல் ஞானசற்குரு சிவ செல்வராஜ்

கன்னியாகுமரி தங்க ஜோதி ஞானசபை

Tuesday, February 14, 2012

கண் வழி “கட உள்”ளே கடவுளை காண்!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருகருணை அருட்பெருஞ்ஜோதி!!!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!!


ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு சிவசெல்வராஜ்அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரிபூரணம் பரமாத்மா! பரம பொருள்! இறைவன்! எல்லா வல்லவரும் கடவுளே! அவரின்றி ஓர் அணுவும் அசையாது! அவர் பேரொளியாக விளங்குகிறார்! அந்த இறைவன் ஒருவரே என இதுவரை இவ்வுலகில் தோன்றிய அணைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.!

அண்ட பகிரண்டமெங்கும் ஒவ்வொரு அணுவுக்கும் அணுவாக துலங்கும் அந்த கடவுள், ஒளியானவர் நமது உடலிலும் இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறார்! நம் உயிராக! ஜீவாத்மாவாக – சிறுஒளியாக துலங்குபவர் சாட்சாத் அந்த பரமாத்மாவே! இதையும் இதுவரை இவ்வுலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர்.!

எண் சான் உடம்புக்கு சிரசே பிரதானம்! உயிராக – சிற்றொளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா!

உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது! அது இறையம்சமல்லவா?

நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர், அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது! ஒன்று, இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது.

நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக, பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும், மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும், அந்த ஊசிமுனை வாசலை மெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது!!

கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்துக் கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும்! இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார்! நம் ஆத்மஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே, அதற்காக நாம் ஞான தவம் செய்தாலே, நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும்!

ஜீவன் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியில் செல்வதுதான் புத்திசாலித்தனம்!

நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனையடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம்! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே!

நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றால், கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரோளியான அந்த இறைவனை அடையலாம் அல்லவா?!

நம் அகத்தீ பெருக வேண்டும்! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான்! சுட்டும் இருவிழிசுடர் தான் சூரிய சந்திரனாகும்! எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே! சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே! பரிபாஷைகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுபவரே ஞானம் பெறுவர்!

பரிதவிக்கும் மக்கள் மரணமிலாது காக்க! பரிபாஷையாக கூறியது சிந்திக்க வைக்க! தெளிவடைய செய்ய! மக்களை தன்னிலை உணரச் செய்யவே! சந்தேகமற உபதேசித்து ஞானஉபதேசம் நல்கி முதலில் மனிதனாக்கி பின் புனிதனாக்கியருளினார்கள் ஞானிகள்!

உலகெங்கும் ஞானிகள் தோன்றி, ஆங்காங்கே உள்ள மொழிகளிலே கூறியதும் ஒருவரே! அவர் ஜோதி வடிவானவர்! எங்கும் நிறைந்தவர்! எல்லாம் வல்லவர்! மனித உடலில் தலையில் ஜீவனாகி, ஒளிர்ந்து, இரு கண்மணியிலும் துலங்குபவர்!

கண்மணியில் ஒளியாக துலங்கும் நம் ஜீவ சக்தியால் உள்ஒளியை அடைய வேண்டும்! தடையாக விளங்கும் திரைவிலக நம் தவத்தால் ஞானாக்கினியை பெருக்க வேண்டும்! நம் கண்மணி ஒளி பெருகி, நம்உள் கடந்து தான், நம்முள் துலங்கும் கடவுளை நாம் காண முடியும்! கடவுளை நினைந்து கண்மணி ஒளியை நினைந்து குரு உபதேசத்தால் உணர்த்து குரு தீட்சையால் உணர்ந்து ஞானதவம் இயற்ற நம்முள் நெகிழ்ச்சி உருவாகும்!

நெகிழ்ச்சி அதிகமாக, அதிகமாக கண்ணீர் அருவியென கொட்டும்! அங்ஙனம் ஆறாக பெருகும் கண்ணீரில் நாம் குளிக்க வேண்டும்! இதுவே கங்காஸ்நானம்! அதாவது விடாது சதாசர்வ காலமும் நாம் தவம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்! கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம் செய்யச் செய்ய உள் ஒளி பெருகி கண்மணிமுன் உள்ள திரை விலகும்! உருகி கரையும்! பின்னர் தானே ஜோதி தரிசனம்!

ஒவ்வொரு மனிதனும் மரணத்தை வென்றிட வழிகாட்டவே, வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையில் 7 திரை நீக்கி தங்கஜோதியை காண வைத்துள்ளனர்! ஞானம் பெற நாடுவீர்! குருவை! யார் ஒருவர் கண்மணி ஒளியைப்பற்றி கூறி, உணர்த்தி தீட்சை தருகிராரோ அவரே ஞான சற்குரு! இதனால் மட்டுமே ஞானம் கிட்டும்!

ஞானம் என்றால் பரிபூரண அறிவு! தெளிவு! நான் – ஆத்மா – இறையம்சம் என்பதை பூரணமாக தெரிந்து – தெளிந்து – உணர்த்து கொள்வதே ஞானம்!

பற்பல பிறப்பெடுத்து துன்பப்படுவதிலிருந்து உன் ஆத்மா விடுதலை பெற ஒரேவழி ஞானசாதனைதான்! பிறப்புக்கு காரணமான வினைசேர்ந்த, மும்மல, 7 திரை அகற்ற நாம் செய்யவேண்டியதே ஞான சாதனை!

நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை நீக்கி, நம் உள் ஒளியை பெருகி நம் ஊன உடலே ஒளி உடலாக மிளிரச் செய்வதே ஞான சாதனை!

எல்லா காலத்திலும் எல்லோராலும் சொல்லப்பட்ட இந்த ஞானத்தைத் தான் நம் வடலூர் வள்ளலாரும் சொன்னார்.

ஆயிரமாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்வதைவிட மேலானது, சிறந்தது ஞானதானமே!! ஒரு ஆன்மா தன்னை உணர்ந்து ஞானம் பெற வழிகாட்டுவதே மிகப்பெரிய சேவை! தானத்தில் சிறந்தது ஞானதானமே!

மரணத்தை வென்றிட, பிறாவதிருக்க வழிகாட்டி ஒரு ஆன்மா கடைத்தேற உதவுவதைவிட சிறந்த ஒப்பற்றபணி இவ்வுலகில் வேறு உண்டுமா?! இதுவே ஞான தானம்!!

மரணமிலா பெருவாழ்வு வாழ வழிகாட்டினார் வள்ளலார்! அவர் அருளால், விழி வழி ஒளிகாட்டி, உணர்த்தி எங்கள் ஆன்மீகச் செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் செய்து வருகிறார்கள்! வருக! ஞானம் பெருக! ஞானதானம் செய்க!

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளால், ஆயிரம் பேர்களுக்கு சாப்பாடு கொடுப்பதை விட ஒரு ஆத்மா கடைத்தேற வழிகாட்டுவதே உன்னதமான சேவை என்பதை உணர்ந்த ஞான சற்குரு சிவா செல்வராஜ் அய்யா அவர்கள் ஞானதானம் செய்து வருகிறார்கள்! வயிற்றுப்பசிக்கு உணவு கொடுப்பதைவிட, கோடி பங்கு மேலானது ஆன்ம பசிக்கு உணவு கொடுப்பதே!! உலகத்திலேயே மிக மிக உயர்ந்த, உன்னதமான சேவை ஒவ்வொருவரையும் தன்னை உணரச்செய்ய வழிகாட்டுவதே!

வள்ளலார் உரைத்த “சமரசம்”, ஜாதி மதம் இனம் மொழி எதுவும் இல்லாது உலக மக்கள் அனைவரும், “நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளே”, எவ்வித பேதமுமின்றி, எல்லோரையும் அரவணைத்து எல்லோரையும் ஏற்றுக்கொண்டு இறைவனை அருட்பெரும்ஜோதியை அடைய முயுலுவதேயாகும்! “முயற்சி திருவினையாக்கும்”!

“கண்ணும் கருத்துமாக இருப்பவரே ஞானி”

ஞான சற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் 1980 – லிருந்து ஞான தவம் புரிந்து ஆன்மீக பணியாற்றி இந்த 32 ஆண்டுகளில் எல்லோரும் இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்பதற்காகவே ஞான இரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞ்ஞான விளக்கவுரையோடு 35 மெய்ஞ்ஞான நூற்களை எழுதி வெளியிட்டுளார்கள்.

2011 தைப்பூசத்தில் 108 செட் புத்தகங்கள் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது.

2011 குருபூஜையில் 108 செட் புத்தகங்கள் மேலும் 108 கல்லூரிகளுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது. 2011 திருக்கார்த்திகையில் 120 செட் புத்தகங்கள் வேலூர் மாவட்ட 120 நூலகங்களுக்கு ஞானதானமாக வழங்கப்பட்டது!

“அன்னசத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஒரு சத்திரம் கட்டி ஆயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இதுபோல ஆயிரம் சத்திரம் கட்டி ஆயிரமாயிரம் பேர்களுக்கு சாப்பாடு போடுவதைவிட ஒருவருக்கு எழுத்து அறிவிப்பது எந்த எழுத்து தெரியுமா எட்டும் இரண்டும் அதாவது “அ” “உ” வாகிய இந்த ஞான எழுத்து சொல்லிக் கொடுப்பதே சாலச் சிறந்தது! என்கிறார் பாரதியார்!

இதையேத்தான் ஔவையாரும் வலியுருத்தியிருக்கிறார்! அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது ...... ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது...... தனமும் தவமும் தான் செய்தல் அரிதே! என்று ஆணித்தரமாக கூறுகிறார்!

மனிதராய் பிறந்தால் மட்டும் போதாது. ஞானக்கல்வியை சாகாக் கல்வியை கற்க வேண்டும். அது எட்டும் இரண்டுமே! “அ” “உ” என்பதேயாகும்! தான் கற்ற ஞானக்கல்வியை “அ’ கார “உ”காரத்தை அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்! இதுவே ஞானதானம்! அது மட்டுமா? குருமூலம் ஞானக்கல்வி கற்று ஞானதானம் செய்வதோடும் நாம் கடைத்தேற, விடாது வைராக்கியமாக இருந்து ஞான தவமும் செய்ய வேண்டும்!

ஞானம் இரகசியம் வெளியே சொல்லாதே என ஔவையார் சொல்லவில்லையே! எல்லோருக்கும் நீ கற்ற ஞானக்கல்வியை ஞானதானம் செய்! என்றல்லவா சொல்லியிருக்கிறார்! குரு உபதேசத்தை எல்லோருக்கும் சொல்! ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்களின் மெய்ஞ்ஞான நூற்களை எல்லோருக்கும் வாங்கி கொடுங்கள் இதுவே ஞானதானம்! ஞானதவம் சித்திக்க வேண்டுமானால் ஞானதானம் செய்!!

தங்கஜோதி ஞான சபையின் அன்பர் ஜோதி ஸ்ரீ A.S. விஜயன் அவர்கள் செய்த ஞானதானத்தால், இரக்க உள்ளதோடு கருணை புரிந்ததால், வடலூரிலே வள்ளலாரால் உருவாக்கப்பட்ட சத்திய ஞான சபையிலே நடக்கும் 141-வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் வடலூருக்கருகே மேட்டுக்குப்பம் சித்திவளாகத்திரு மாளிகையில் திருவருபிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியுடலாகி அருட்பெரும்ஜோதி ஆண்டவரோடு ஐக்கியமான 139-வது வருடம் 7-2-2012-ல், சைவர் கண்ட சிவமே, வைஷ்ணவர் கண்ட நாராயணர் என்பதை தெளிவுபடுத்தி, எல்லா ஞானிகளும் கண்ட – உணர்ந்த இறைவன் ஒருவரே-அருட்பெரும்ஜோதியே என்பதை தெளிவுபடுத்தி, “பரமபதம் எட்டெழுத்து மந்திரம் அ” என்று எங்கள் சற்குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதிய மெய்ஞ்ஞானவுரையை வடலூர் பெருவெளியில் வெளியிடுவதிலே பெருமகிழ்வு அடைகிறோம்.

“அ’ கண்ட ஆழ்வார் அனுபவ நூலே நாலாயிர திவ்ய பிரபந்தம்! இதற்கும் மெய்ஞ்ஞானவுரை எழுத அருள்புரிந்த கண்ணனுக்கு, கண்மணியான கார்முகில் வண்ணனுக்கு எங்கள் தங்க ஜோதி ஞான சபை அன்பர்கள் சார்பாக சரணம்! சரணமே!


தானமும் தவமும் செய்க!ஞான நூற்களை வாங்கிஞானதானம் செய்க!மெய்ப் பொருளை உணர்ந்துதவம் செய்க!

வாழ்க வளமுடன்!


P. மதிவாணன்
mathish0610@gmail.com

Wednesday, February 1, 2012

தைப்பூச ஜோதி தரிசனம் – பார்க்க!

ஒவ்வொரு தைப்பூசம் தோறும் பலர் ஜோதி தரிசனத்தை கண்டிருக்கலாம். ஆனால் தைப்பூசம் அன்று காட்டப்படும் முதல் ஜோதியில் ஒரு சிறப்பு உள்ளது.

ஆம், தை பூசம் அன்று காலை நீங்கள் ஞான சபை உள்ளே சென்று ஜோதி தரிசனம் பார்க்காமல் வெளியே நின்று பாருங்கள்.

நாம் அப்படி வெளியில் நின்று உற்று பார்க்க வேண்டும் என்றுதான் நடுவில் ஞான சபையை கட்டி அதை சுற்றிலும் காலி இடமாக அமைத்தார்

இப்பொழுது நாம் தை பூசம் அன்று வெளியில் நின்று பார்த்தால்….

இடது பக்கம் அதாவது மேற்கு பக்கம் சந்திரனும், வலது பக்கம் அதாவது கிழக்கு பக்கம் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் அதாவது மேற்கே சந்திரன் மறையும் கிழக்கே சூரியன் உதயம் ஆகும் போது நடுவில் சத்திய ஞான சபையில் அகண்ட பெருஞ் ஜோதியை ஏழு திரை நீக்கி தரிசனம் காண செய்வித்தார்கள். இதுவே மிகப்பெரிய தத்துவம்.

நாம் நமது வலது கண்ணாகிய சூரிய கலையோடும் இடது கண்ணாகிய சந்திர கலையோடும் ஒளி பொருந்திய அக்னி கலையாகிய மத்தியில் உள்ள பரம்பொருளை தரிசிக்க ஏழு திரைகள் தடையாக உள்ளது. நம்மிடம் உள்ள துர்குணங்களின் கூட்டே ஏழு திரைகள்.

நாம் நம் கண்ணில் ஒளியை பெருக்க பெருக்க நம்மிடம் உள்ள அஞ்ஞானமாகிய இருளாகிய - ஏழு திரைகள் ஒவ்வொன்றாக நீங்கி முடிவில் ஜோதி தரிசனம் அனுபவத்தில் காணலாம். இதை விளக்கத்தான் வடலூரில் தை பூசத்தன்று ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்.

சூரியனும் சந்திரனும் நம் வலது கண்ணாகவும், இடது கண்ணாகவும் உள்ளன.

இந்த முறை தைப்பூச ஜோதியை வடலூர் சத்திய ஞான சபையில் காண்க! பின் ஜோதியை உங்களுக்குள் காண முயற்ச்சியை மேற்கொள்ளுங்கள் என எல்லாம் வல்ல அருட் பெரும் ஜோதியை வேண்டிகொள்கிறோம்.

Courtesy: http://www.vallalyaar.com

தானமும் தவமும் செய்க!

ஞான நூற்களை வாங்கி
ஞானதானம் செய்க!
மெய்ப் பொருளை உணர்ந்து
தவம் செய்க!

வாழ்க வளமுடன்!

P. மதிவாணன்
mathish0610@gmail.com

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...