Tuesday, May 28, 2013

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் !உயிராக சிற்றோளியாக நம் உடலில் தலையின் உள் நடுவே இருக்கிறார் அந்த பரமாத்மா !

உச்சிக்கு கீழே அண்ணாக்குக்கு மேலே சுடர்விடும் அந்த ஜோதி அழியாதது !அது இறையம்சல்லவா !
நம் தலை உள் நடுவிருக்கும் நம் உயிர் , அங்கிருந்து இருநாடி வழி இரு கண்களிலும் துலங்குகிறது ! ஒன்று , இரண்டாக இரு கண்மணியாக ஒளிர்கிறது !

நம் கண்மணி பூமியைப்போல் உருண்டையாக , பூமியைப்போல் உள் மத்தியில் நெருப்பை கொண்டதாகவும் , மத்தியில் ஊசி முனையளவு துவாரம் உள்ளதாகவும் , அந்த ஊசிமுனை வாசலைமெல்லிய ஜவ்வு மூடியபடியும் அமைந்துள்ளது !!

கண்மணி ஊசிமுனை வாசலை மறைத்து கொண்டிருக்கும் மெல்லிய ஜவ்வே நம் மும்மலத் திரையாகும் !

இதைத்தான் நமது வள்ளலார் 7 திரைகளாக விவரித்து கூறியுள்ளார் ! நம் அத்மஜோதியை மறைத்து கொண்டிருக்கும் 7 திரைகளும் விலகினாலே , அதற்காக நம் ஞான தவம் செய்தாலே , நாம் நம்முள் இருக்கும் நம் ஜீவனான அந்த பரமாத்மாவை தரிசிக்க முடியும் !

ஜீவன் எங்கிருக்கிறது ? எப்படி இருக்கிறது ? என்பதை முழுமையாக அறிந்து அதை அடைய ஞானிகள் காட்டிய வழியல் செல்வதுதானே புத்திசாலித்தனம் !

நம் சிரசின் உள் மத்தியில் உள்ள நம் ஜீவனுடைய, அதோடு தொடர்பு உடைய நம் இரு கண்கள் வழியாக உள்பிரவேசிப்பதுதானே சாத்தியம் ! உலக ஞானிகள் உரைத்த சத்தியம் இதுவே !

நம் சரீரத்தின் விளக்காக கண் விளங்குகிறது என்றல் , கண் ஒளியால் நம் உள் ஒளியை பெருக்கி பேரொளியான அந்த இறைவன் அடையலாம் அல்லவா ?!

நம் அகத்தீ பெருகவேண்டும் ! அகத்திலே துலங்கும் ஈசன் அருள்வான் ! சுட்டும் இருவிழி சுடர்தான் சூரிய சந்திரனாகும் !

எட்டும் இரண்டுமாக இருப்பது இரு கண்களே !

சிவசக்தியாக இருப்பதும் இரு கண்களே !

“ஊனமர்ந்தோரை உணர்வது தானே”
இறைவன் மனித தேகத்தில் “ஊன்” கண்ணில் மணியில் ஒளியாக துலங்குகிறான் என்பதை உணர வேண்டும். இம்மானிட பிறவி எடுத்ததன் பயன் இதுவே.

“சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவதறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித் தவரைப் பிதற்று கின்றாரே”

எல்லாம் வல்ல இறைவன் பேரொளி . அதன் ஒரு சிறு சோதியானது மூன்று நிலையாகி சூரிய சந்திர அக்னியாகி முச்சுடராகி விளங்குகிறது. ஐந்து பூதங்களும் இணைந்து ஒரு சேர நின்ற கண்களில் துலங்குகிறது.

மூன்றும் ஐந்தும் எட்டு ‘அ’ என்றும் கண்ணாக நிற்கிறது. ஆதிக்கண் என்றது நாம். நம் தாயின் கருவில் உருவாகும்போது இறைவனால் அருளப்பட்ட ஜீவனைக் குறிப்பதாகும். இரு கண் மூலமாகவே ஆதிகன்னான ஜீவனை அடைய முடியும். பாவாத்மாக்கள் இந்த உண்மையை சொன்னாலும் புரிந்து கொள்ளார். இறைவன் நம் உடலில் இங்ஙனம் குடி கொண்டிருக்க இது புரியாமல் சிவன் விஷ்ணு பிரம்மா என பலவாறு தெய்வங்களை கூறி பிதற்றுவார்கள்.

உடலினுள்ளே பார்க்காமல் உலகிலே தேடுவார்கள்.

நமது கண் ஒளியை பெருக்கி உள்ளே கொண்டு போனால் உள் உள்ள ஆன்ம ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வினைகள் அகன்று விடும். இதுவே ஞான தவம். இப்படி செய்துதான் நாம் தூய்மையாகிதன் இறைவனை அடைய முடியும்.

நம் சிரசிலிருந்து ஒரு நாடி கீழே இறங்கி நமது தொண்டையில் உள்ள சிறிய நாக்கின் மேல் பகுதியில் அண்ணாக்கின் மேல் நின்று அங்கிருந்து இரு நரம்பாக பிறந்து இரு கண்களிலும் வந்து சேர்க்கிறது.

நாம் நம் கண்மணி ஒளிமூலம் தவம் செய்யும் போது இருகண்ணும் உள்ளே ஒன்றுசேரும் இடமே உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேல. இதுவே நமது ஆத்மஸ்தானம். உயிர் இருக்குமிடம்.

“உச்சிக்கு கீழடியோ அண்ணாவுக்கு மேலே வைத்த விளக்கு நித்தம் எரியுதடி வாலைப்பெண்ணே”

நமது உயிர் – பிராணன் – ஜீவன் – ஆத்மா இருக்கும் இடம் இதுவே.

இதற்க்கு வாசல் இரு கண்களே ஆகும் இதை அறிந்தால் தானே தவம் செய்ய முடியும். குருவடி தீட்ஷை பெற்று உணர்ந்து தவம் செய்து ஆத்மஜோதியை தரிசிக்கலாம்.


திருமந்திரத்தில் முதல் பாடலாக இங்கே வைக்க விரும்புவது 138 வது பாடல்தான்


பாடல் – 138

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.இறைவன் திருவடியே நமது கண்கள்!


இங்கு திருமூலர் திருவடி என்று எதை சொல்கிறார் என்பதை முதலில் விட்டு விடுவோம். ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது என்ன என்பதை ஆணித்தரமாக திருமூலர் அய்யா சொல்கிறார். ஆம் நான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார்


விளக்கம்

“திருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.
திருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.
திருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.
திருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்!”
மேலே இருக்கும் விளக்கத்தில் இப்பொழுது “இறைவன் திருவடி கண்கள்” என்பதை பொறுத்தி படித்து கொள்ளுங்கள்.


எல்லாவற்றுக்கும் தேவை திருவடி! எல்லாம் பெற தேவை திருவடி! நாம் நாட வேண்டியது திருவடி!இதுதான் மெய்பொருள்!

“மந்திர மாவதும் மாமருந் ஆவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே”திருவடியே கதி, திருவடியே சிவலோகம் மற்றும் திருவடியே சரணாகதி என்று சென்ற பாடலில் உள்ள பாடலை பார்த்தோம். மேலும் தந்திரம், தானம், சுந்தரம் மற்றும் தூய்நெறி எல்லாம் இதுதான் என்று சொல்கிறார். நாம் வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை இந்த திருவடியை பிடித்தால் மட்டும் போதும்


மேலும் திருவடி பற்றி தெரிந்து கொள்ள http://tamil.vallalyaar.com/?page_id=2596
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...