Saturday, June 28, 2014

உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு.

அன்பர்களுக்கு வணக்கம்!
உலக குரு வள்ளலாரின் மெய்ஞான உபதேசம் - ஆன்மீக சொற்பொழிவு.

இடம்: 
அருள்மிகு சக்தி விநாயகர் திருகோயில்
பி.டி. ராஜன் சாலை, கே. கே. நகர் (சிவன் பார்க் அருகில்) 
சென்னை - 600 078 

தேதி: ஜூலை 6-ம் தேதி 2014
நேரம்: மாலை 5:30pm to 8:00pm மணிக்கு

அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை.
கன்னியாகுமரி - வடலூர் - ஓசூர் - பெங்களூர் - காஞ்சிபுரம் - சென்னை - திருச்சி

Wednesday, June 11, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் - 54

இன்று ஒரு அகவல் 

காரணம் காரியம் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்சோதி (அகவல் 54) 

     காரணம் என்பது சூட்சுமம். அதன் செயல்பாடே காரியம் ஆகும்.  உண்பது செயல் அதற்குக் காரணம் பசி. ஒருவருடன் சண்டை போடுகிறோம் அது செயல், அதற்குக் காரணம் அவர் மீதுள்ள கோபம்.   காரணம் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம்.  காரியம் வெளியே புலப்படுவது.  நல்ல உதாரணம் வள்ளலார் கூறுகிறார், அதாவது இந்த உடம்பு காரியப்படுகிறது அதற்குக் காரணமாய் இருப்பது இந்த உடம்பிலுள்ள உயிரே ஆகும். 

     அதுபோல் அண்டசராசரங்களின் செயல்பாடு காரியம், அதற்குக் காரணம் இறைவன்.  இறைவன், உயிர் ஆகிய இரண்டு காரணங்களையும் காரியத்தால் மட்டுமே அறிய முடியும் என்கிறார்.

ஆதாரம்: 

பரமதனோடுலகுயிர்கள் கற்பனையே யெல்லாம்
பகர் சிவமே யெனவுணர்ந்தோமாதலினால் நாமே
பிரமமெனப் பிறர்குரைத்துப் பொங்கி வழிந்தாங்கே
பேசுகின்ற பெரியவர்தம் பெரிய மதம் பிடியேல்
உரமிகு பேருல குயிர்கள் பரமிவை காரியத்தால்
உள்ளனவே காரணத்தால் உள்ளன வில்லனவே 
தரமிகு பேரருளொளியாற் சிவமயமே யெல்லாந்
தாமெனவே யுணர்வது சன்மார்க்க நெறி பிடியே
                                                                         (திருவருட்பா 5699)


     புராணக் கதைகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.  எந்த நீதியை அல்லது உண்மையைச் சொல்வதற்காக அந்தக் கதைகள் புனைந்து எழுதபட்டனவோ அந்த உண்மைகள் புராணங்கள் படிக்கின்ற அத்தனை பேர்களுக்கும் புரிந்து விடுவதில்லை.  ஒரு சிலரே அவற்றின் உணமைகளைப் புரிந்து கொள்கின்றனர்.  வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் முதலியன எந்த உண்மையை வெளிப்படுத்த எழுதப்பட்டனவோ அந்த உண்மைகளே காரணமாகும்.  எழுதப்பட்ட செயல் காரியம். 

     ஆசாரியன் அனுக்கிரகத்தால் யார் தன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறக்கப் பெற்று கொள்கின்றார்களோ அவர்களுக்கு பட்டப் பகல் போல விளங்கும் என்கின்றார்.

     இதனையே வள்ளலார் "தகுந்த ஆசாரியான் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுகொள்வது நலம்" என்றார்.  இதுவே ஞான தீட்சை.

ஆசாரியன் அனுக்கிரகம் பெறாமலும், தங்களது நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொள்ளாமலும் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாவரும் வேதங்கள் முதலியவற்றின் உண்மைகளை அறியாமலும் அவற்றின் பயனை அடையாமலும் மாண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

     பிண்டத்தில் ஆகாயம் புருவமத்தி - கண்மணி - அதுவே நெற்றிக் கண் - அதுவே சிற்சபை - எனவே காரணம் இது காரியம் இது எனச் சுட்டக் காட்டுகின்ற ஆகாச வெளியாகிய புருவமத்தியாகிய சிற்சபையைத்தான் வேதங்கள் விளக்குகின்றனவாம்.  வேதங்களால் போற்றப்படும் சிற்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியானது காரணமிது காரியமிது என விளக்குகிறது.

     காரண காரியங்களைத் தெரிவிப்பன வேதங்கள் ஆகும்.  

ஆதாரம்: 

ஆரணம் என்பது வேதம்

காரணக் காரியக் கல்வியைக் கற்பித்து 
ஆரண வீதியில் ஆடச் செய்தீரே (திருவருட்பா 4645) 

     பதிநிலையை விளக்கும் ஆரணமாகிய வேதம் இந்த வரியில் கூறப்பட்டது. 

Please visit: www.vallalyaar.com

Tuesday, June 10, 2014

அருட்பெருஞ்ஜோதி அகவல் - 52இன்று ஒரு அகவல்சாகாக் கலை நிலை தழைத்திடு வெளிஎனும்
ஆகாயத் தொளிர் அருட்பெரும்ஜோதி   (அகவல் வரி 52)

     சாகக்கலை என்பது சாகாத் தலை, வேகாக்கால், போகாப்புனல் என்ற மூன்று பகுதிகளைப் கொண்டது. இந்த மூன்றின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் சாவே போ என்று வரும். 


      மரணத்தைத் தவிர்க்கும் சாகக் கல்வி செழிக்கும் இடம் பிண்டத்தில் ஆகாயமாகிய புருவ மத்தியே ஆகும்.  

"கருவேரற்றிடவே களைகின்ற என் கண்ணுதலே" என்று பாடுவார்கள். 

     பிறவியை வேரறுக்க வல்லது நுதற் கண்ணாகிய புரு மத்தியே யாகும் .


     கரண ஒழுக்கத்தில் மனதை எந்தவித ஆபாசத்திலும் செலுத்தவொட்டாமல் இழுத்து நிறுத்துதல் என்று கூறியவர், அடுத்து முதலில் புருவ மத்தியில் நிறுத்துதல் என்கிறார். கட்டுக் கடங்கா மனப் பரியைக் கட்ட வேண்டிய இடம் புருவமத்தியே ஆகும்.  

     மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள்தான் நம்மை அருள் வழியில் செல்ல வொட்டாது தடுத்து உலகியலில் அழுத்துகின்றன என எல்லோரும் எண்ணுகின்றோம் ஆனால் அதே கரணங்கட்கு மரணத்தையே தடுக்கக் கூடய பேராற்றல் உண்டு என்கிறார். 

"மரணப் பெரும் பிணி வாராவகை மிகு 
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே (அகவல்) 

     சாகாத கல்வியைத் தரக்கூடிய அனுபவம் செழித்து விளங்கும் வெளியாகிய சிற்சபை எனும் புருவமத்தியாகிய ஆகாயத்தே பிரகாசிக்கின்ற அருட்பெருஞ்சோதி.  
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...