Monday, September 1, 2014

அன்பே சிவம்

அன்பே சிவம்



அன்பே சிவம் என்று திருமூலர் சொல்கிறார், இதோ அவர் பாடல்

அன்பும்சிவமும்இரெண்டேன்பார்அறிவிலார்
அன்பேசிவமாவதுயாரும்அறிகிலார்
அன்பும்சிவமும்ஒன்றென்றுஅறிந்தபின
அன்பேசிவமாய்அமர்ந்துஇருந்தாரே

இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது……. திருமூலர் அன்பு என்று எதை சொல்கிறார் என்று தான்.

யாம்….. இவ்வளவு நாள் இது அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு என்று நினைத்துஇருந்தோம்..
ஆனால் ஊன்றி கவனிகையிலே தெரிகிறது…….இது நாம் அடுத்தவர் மீது செலுத்தும் அன்பு அல்ல.

உங்கள் உடம்பில் எங்கு அன்பு உருவாகிறதோ அல்லது எங்கு நிலை கொள்கிறதோ 
 அதைதான் திருமூலர் சிவம் என்று சொல்கிறார்.

இதைதான் வள்ளல் பெருமானும் ஆன்ம நேய வழிபாடு என்று சொல்கிறார். 

உடம்பில் அன்பு உருவாகும் இடம் எது?

சில நண்பர்கள் எப்பொழுதும் சினம் கொள்ளமால் அமைதியாகவும் அன்புடனுமே இருப்பார்கள்.

நீங்கள் எவ்வாறு இப்படி சினம் அடையாமல் இருகிறிர்கள் என்று கேட்டால் அவர்கள் சிரிப்பார்கள்.

ஆனால் அவர் உடன் இருக்கும் நண்பர்கள் சொல்வார்கள் 'அவர் சிறுவயது முதலே இப்படிதான் அன்பாக இருப்பார்’ என்று சொல்வார்கள்.

சிலர் மேலும் ஒரு படி மேலே சென்று “அது எல்லாம் பிறப்பிலே அமையினும் ஐயா” என்று சொல்வார்கள்.

அது என்ன பிறப்பிலே அமைவது?

அது வேறொன்றுமில்லை… உங்கள் உயிரிலே அமைய வேண்டும் என்பதைத்தான் அவர்கள் புரியாமல் சொல்கிறார்கள் ஆம் நம் உயிர் தன்மை எந்த அளவு அன்பு மயமாக இருக்கிறதோ அந்த அளவு நாமும் மற்ற உயிர்களிடம் அன்பாக இருக்க முடியும்.

அது என்ன உயிர் தன்மை?

நம் உயிரின் தன்மைதான். அதை எவ்வாறு அடைவது?

நாம் செய்யும் தவம் நம் உயிர்தன்மையை தொட வேண்டும், அவ்வாறு நீங்கள் உயிர் தன்மையை தொட்டு தவம் செய்திர்கள் எனில் உங்களுக்கு ஒன்று நடக்கும். அது என்ன?

அதைத்தான் வள்ளல் பெருமான் சொல்கிறார்.

“நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து
ஊற்றெழும் கண்ணீர் அதனால்
உடம்பு நனைந்து நனைந்து
அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரச
என்னுரிமை நாயகனே என்ற
வனைந்து வனைந்து ஏத்ததும
நாம் வம்மின் உலகியலீர
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம
கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன
சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” 

அது என்ன நம் உயிர் தன்மையை தொட்டு செய்யும் தவம்?

அது ஒன்றும் அல்ல நம் உயிர் எங்கு இருக்கிறது அதை அடையும் வழியை எவ்வாறு அடைவது என்று தெரிந்து தவம் செய்வதே ஆகும்.

அன்பே சிவம் என்று எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்பு நம் உடலில் எந்த விடயத்துடன் சேர்ந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

ஆம் அது உயிருடன் கலந்திருக்கிறது. இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிர்களிலும் அன்பெனும் வடிவத்தில் சிவமாய் நிற்கிறது.

இதை ஞானிகள் உணர்ந்ததால் தான் இயேசு ‘அயலானையும்நேசி’ என்றார்.

வள்ளல் பெருமான் ஜீவ காருன்மையே (கொலை தவிர்த்தலே) கடவுளை அடையும் வழி என்கிறார்

உயிர் எங்கு இருக்கிறது?

உயிர் பற்றி திருமூலர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று பாப்போம்?

அந்த பாடல்

உயிர்?

இந்த பாடலில் திருமூலர் உயிர் பற்றி மட்டும் சொல்லவில்லை.

சிவலிங்கம் என்பது என்ன என்பதை சொல்கிறார்

இதன் மூலம் காலம் காலமாக சிவலிங்கம் பற்றிய நம்முடைய தவறான கண்ணோட்டத்தை சம்மட்டியால் அடித்து எறிகிறார்…………..(Some people used to say it’s sexual organ…….but it’s not true)

அந்த பாடல்.


"உள்ளம் பெரும்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல்பிரானுக்கு வாய் கோபுரவாசல்
தெள்ளதெளிந்தோற்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காணாமணி விளக்கே"

நாம் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்தை தான் கையெடுத்து கும்பிடுகிறோம்.

இந்த பாடலின் முதல் வரியிலே திருமூலர் ஐயா சொல்லிவிட்டார் ஊனுடம்பு ஆலயம் என்று
உங்கள் உடம்புதான் ஆலயம் என்று சொல்லி விட்டார், பின் சிவலிங்கம் மட்டும் என்ன ஆலயத்திற்கு வெளியிலா இருக்கும்?

ஒரு படி மேலே சென்று “சீவன் சிவலிங்கம்”என்றும் சொல்லி விட்டார்.

இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கலாம் நான் ஏன் நீங்கள் செய்யும் தவம் உங்கள் உயிர் தன்மையை தொட வேண்டும் என்று சொன்னேன் என்று.

நீங்கள் கையெடுத்து கும்பிட வேண்டிய சிவலிங்கம் புறத்தில் உள்ள ஆலயத்தில் இல்லை
ஊனுடம்பாகிய உங்கள் உடம்புனுல்லேதான் இருக்கிறார்.

இதைதான் அவ்வை பிராட்டியும் சொல்கிறார்

உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனை தேடு” என்று சொல்கிறார்.

திடம்பட ஈசனை தேடு” – என்று அவ்வையார் சொல்லி விட்டார். எங்கு போய் தேடுவது?

உடம்பினுள் இருக்கார் என்று திருமூலரும் மற்றும் அவ்வையாரும் சொல்லி விட்டார்கள்.

இன்னும் வேறு ஏதாவது நெருங்கி சொல்லி இருகிறார்களா?
ம்ம்... திருமூலர் இன்னும் அருகில் சொல்கிறார்

எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்று ஒரு பாடலில் சொல்கிறார்...

இதன் மூலம் சிவம் என்னும் சீவனாகிய உயிர் உங்கள் தலையில் தான் அமைந்திருக்கிறார் என்று சொல்கிறார். ஆம், சிவம் என்றால் ஒளி என்றே பொருள்படும்.

சிவம் என்பது தனிப்பட்ட சாதிக்கோ, சமயத்திற்கோ உரியவர் அல்ல..

இவர் எல்லா மனிதர்களிடமும் உள்ளார் என்பதை ‘வள்ளல் பெருமான்’ மிக தீர்க்கமாக நம்பியதால்தான் இப்படி பாடினார்

சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் சோதி

சிவம் இனம், மதம், மொழி எல்லாம் கடந்து எல்லோருடைய தலை பகுதியில் இருக்கிறார்.

ஆம், “தேவன் ஒளியாய் இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவ்னை தரிசிக்கலாம்” – Jesus Christ

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருருங்கருணை அருட்பெருஞ்சோதி
– வள்ளலார்

எல்லா ஞானிகளும் கடவுள் ஒளியாக இருக்கிறார்கள் என்றே சொன்னார்கள். அபபடி எனில் கடவுளை அடையும் வழியும் ஒன்றாகவே இருக்கும். 

அதாவது எல்லா ஞானிகளும் இறைவனை அடைய செய்த முயற்ச்சியும் ஒன்றாகவே இருக்கும்.
 
அபிராமி திருவடி போற்றி!


No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...