Tuesday, January 27, 2015

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம்


ஜீவர்கள் ஆசையின் மோகத்தால் பல பிறவிகள் தோறும் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஈடாய், ஜெனன மரண துக்கங்களை அனுபவித்துக் கடைசியாய் மனிதப்பிறவி எடுத்துள்ளனர்.
இறைவனை அடைய வேண்டிய மார்க்கங்களைத் தெரிந்து தெளிந்து, அதன்படி ஒழுகி, ஞான அனுபவங்களைப் பெற்று, மனித உடலை அழித்து, ஐம்பூதத்தில் ஒன்றில் சேர்த்து விட்டு, ஜீவனானது சச்திதானந்த சொருபமான இறைவனோடு இரண்டறக் கலத்தல் வேண்டும்.
அதாவது ஜீவாத்மாவானது, பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகவேண்டும். இதையே கல்கி அவதாரமாகக் கற்பித்தனர்.
இவை எல்லாம் உலக வளர்ச்சியின் பரிணாமத் தத்துவங்கள். இதைக் கற்பனையாகக் கதை வடிவில், உண்மையாக நடந்தாற் போல், இடம், சம்பவம், பாத்திரங்களை எல்லாம் நன்றாக அமைத்து, வெகு நேர்த்தியாகப் பாகவதப் புராணமாக இயற்றியுள்ளார்கள்.

No comments:

Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...