Friday, May 22, 2015

6. தாரணை - (அட்டாங்க யோகம்)
6.  தாரணை:

     கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி 
     இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
     மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் 
     குடையாமல் ஊழி இருக்கலுமாமே.  -- 591 

விளக்கம்: 

     (சூரியன் சந்திரன் இருக்கும் இடங்களில்) கடைபாகத்திலுள்ள வழியைக் கட்டி இன்பமாக உள்ளே செல்லும்படி இருத்தி அபானனை எழுப்பி (பிராணாபானனுடைய சேர்க்கைக்காக பிரணவத்தின்) நடு வீட்டைப் பார்க்க நீ செல்லும் படியான வழியில், மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போல இமையாமல் பார்த்துக் கொண்டிருபவர்கள் நாசமாகாமல் ஊழிக்  காலம் வரை சாகாமலிருக்கக் கலுமாகும்.

     வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
     வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
     வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர் 
     கோய்திற வாவிடிற் கோழையு மாமே.  -- 593

விளக்கம்: 

     (பிரணவத்தின் நுனியிலுள்ள) சுழி முனையைத் திறந்து கொள்ளாதவர்கள் மனத்திற்குள் சந்தேகம் என்னும் மாடு ஒன்று இருக்கிறது.  சுழிக்கதவைத் திறந்தால் தான் பிராணன் அபானனை அந்த வழியைப் பாய்ச்சுவார்கள்.  சுழிமுனை வாயைத் திறக்கச் சத்தியில்லாதவர்கள் தங்களிடமுள்ள சொற்ப புத்தியைக் கொண்டு அது இது என்று யோசிப்பார்கள்.  சிவமிருக்கும் பரணியைத் திறவாவிட்டால் தவறுதலுடையதாகும்.

 கோய் = பரணி.

     நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
     இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய் 
     வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக் 
     குரங்கினைக் கோட்டை பொதியலுமாமே. -- 595

விளக்கம்:

    நிறைந்திருக்கும் தசவித வாயுக்களில் முக்கியமான வாயுக்கள் பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் என்கிற ஐந்தும் முதலில் வெளிப்பட்டுப் போனால் இதில் விழித்திருந்து என்ன செய்யப்போகிறாய் மூடமே.  எல்லையைக் குறித்துக் கொண்டு அதனால் ஏற்படும் வழியைச் செய்து கொள்பவர்களுக்குக் குரங்கினை (குரங்கு சந்திரன், சந்திர கலையை) பிரணவக் கோட்டையில் அடைக்கலாம்.

குறிப்பு:

     ஔவையார் "மோன மென்பது ஞான வரம்பு" என்ற கொன்றை வேந்தனில் அருளிச்செய்துள்ளார்கள்.  (ஞானவரம்பு - ஞானநிலை)

வரம்பினைக்கோலி என்பதும் ஞானவரம்பு என்பதும் ஆசாரியன் சொல்லும் ஒரு மொழி.

     அரித்த வுடலை ஐம் பூதத்தில் வைத்துப் 
     பொருத்தஜம் பூதஞ்சத் தாதியிற் போந்து
     தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத் 
     தரித்தது தாரணை தற்பரத் தோடே.  -- 597

விளக்கம்: 

    ஆராய்ந்து எடுக்கப்பட்ட பிரணவத்தை பஞ்ச பூதத்தில் கலக்கும்படி வைத்து அலையும் பஞ்சபூத சத்திகளை பிரணவத்தின் முடிவில் செலுத்தி அலையும் மனத்தையும் பிரணவத்தின் முனையில் ஊன்றியிருக்கத் தத்பதத்தோடு ஒன்றிவிடும் இதுதான் தாரணை.

தாரணை முழுவிளக்கம்:

     மனிதனுடைய ஞான வாழ்க்கையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாகிய மனதைத் தன்னிஷ்டம் போல் நடத்தப் பக்குவம் செய்து கொள்வதே தாரணையாகும்.

     நிராசையோடு கூடிய மனத்தைக் குறிப்பாக நிறுத்திக்கொண்டு கரனியாச தந்திரத்தினால் குண்டலியோடு சிதாகாயமும் பொருந்த துவாதசாந்த வெளியைப் பார்வையானது நோக்க முன்னிலையிலுள்ள எதையும் பாராமலும் செவியினால் பஞ்சேந்திரிய சம்பந்தமான எந்த சிறுசத்தத்தையும் கேளாமலும் இருப்பவர்களுக்குச் சிவ தத்துவங்களைக் காணவும் தசவித நாதங்களைக் கேட்கவும் கூடும்.  இவ்விரண்டு விஷயங்களினால் மனமானது தன்னுடைய கிருத்தியங்களினின்று மீண்டு அசைவற்று நிற்கும்.  அச்சமயத்தில் பிரணவ உச்சியிலிருந்து அமுத தாரையானது உண்டாகும்.  அந்த மார்க்கமாக மனதையும் பார்வையையும் பிசக வொட்டாதபடி மேல் செலுத்தினால் உச்சியில் மறைந்து போகாத ஆனந்தமாகிய ஜோதிஸ்வரூபம் உதித்து நிற்கும்.  அதில் மனமானது மற்றப் புற விசயங்களில் செல்வதொழியும்.

      பிரணவ மேருவின் உச்சியின் சார்பில் இருக்கும் பார்வதியாகிய பரநாத சக்தியோடு அதோ முகத்திலிருக்கும் பரவிந்துவின் கலையாகிய சிவ ரூபத்தை எழுப்பி மேல்கொண்டு போய்ச் சத்தியுடன் கலக்க வைக்க, பால ரூபத்தையடைந்து ஆனந்தமானது பொங்கித் ததும்ப மனமானது பரவசத்தினால் சோர்வையடைந்து விடும்.  பிரணவத்தின் உச்சி நேர்கிழக்கு, வலது செவியின் பக்கம் தெற்கு, இடது செவியின் பக்கம் வடக்கு, அதோமுகம் மேற்கு, இவ்விதமாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது.  இந்தச் சாதனையானது ஸ்காந்த புராணத்தினால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.  சிவ பெருமான் யோகத்திலிருந்து எழுந்தவுடன் மன்மதனை எரித்துச் சுப்பிரமணியரை உற்பத்தி செய்ய மேருவுக்குப் போய்ப் பார்வதியை விவாகஞ் செய்துகொண்டு இருந்தாரென்று சொல்லப்படும் புராணத்தின் கருத்து இதுவே.

     சூரிய சந்திரர்களிருக்கு மிடங்களின் உள்கடை வாயிலைக்கட்டி, அவர்களை இன்பமாக உள்ளே செல்லும்படிசெய்து, பிரணவத்தின் மத்திய பாகத்தில் பார்வையையும் மனதையும் நிறுத்தி, அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நாசத்தை அடையாமல் சிரஞ்சீவியாய் இருப்பார்கள்.  பிராணாபானணுடைய சேர்க்கையும் உண்டாகும்.  இந்த இரண்டு வாயுக்களும் ஒன்று சேருவதால் அசைவற்றுக் காலமுஞ் ஜயமடைந்துவிடும்.  ஆராய்ந்து கண்டுபிடித்த பிரணவத்தைப் பஞ்ச பூதத்தில் கலக்கும்படி வைத்து அதனால் உதயமாகும் பஞ்ச பூதசக்திகளைப் பிரணவத்தின் முடியின் மீது செலுத்தி, அவைகளையும் மனதையும் பார்வையையும் ஒன்று படுத்தி உச்சியில் நிறுத்த அவை தத்பதத்தோடு ஒன்றிவிடும்.  இந்தச் சாதனைகள் தாரணையைக் சித்திக்கச் செய்யும்.

Wednesday, May 20, 2015

5. பிரத்தியாகாரம் - (அட்டாங்க யோகம்)5. பிரத்தியாகாரம்


      கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
     கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
     பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
     இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே – 578

விளக்கம்: உள்ளே பார்த்துப் பார்த்து நினைவானது பொருந்த மேல்நோக்கினால் உள்ளே அடைந்த்தடைந்து பல வகையான குணங்களைக் காணலாம்.  பழமையாகவே அன்போடு எவ்விடத்திலும் அனாதியான வேதமானது தேடிக் கொண்டிருக்கும் சிவத்தை இன்றே கண்டு இந்த உலகத்திலேயே இருக்கவும் முடியும்.


      நாபிக்குக் கீழே பண்ணிரண் டங்குலந்
     தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
     தாபிக்கு மந்திரத் தன்னை அறிந்தபின்
     கூவிக்கொண்ட டீசன் குடியிருந்தானே – 579

விளக்கம்: பிரணவத்தின் மத்திய பாகமாகியும், உந்தியாகியும், மனிபூரகஸ்தானமாயும் உள்ளயிடத்துக்குக் கீழ்பனிரெண்டு அங்குலத்தில் பொருத்தி வைக்க வேண்டிய மந்திரமாகிய இரகசியத்தை அறிந்து கொண்ட பிறகு பிரணவ நாதத்தோடு சிவன் பிரணவத்தின் உச்சாரண முடிவில் வந்து சேர்ந்து விடுவான்.

அதோமுகத்தின் (கீழ்முகம்) இரகசியப்படி, அதோமுகத்திலுள்ள பரம சிவன் ஊர்த்துவ முகத்திற்குக் (மேல் முகம்) கொண்டுவரும் தந்திரம், மந்திரம் என்பது இரகசியம்.  இது குருமுகாந் திரத்தில் பெற வேண்டியது.

       மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
     பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
     கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
     ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. – 580

விளக்கம்: மூலத்திலுள்ள இருவிரலுக்கு மேலிலும் முதலிலிருக் கின்றதும் அருளைக் கொடுப்பதுமான யோனிக்கு இருவிரலின் கீழ் நின்றதுமான (கைகளினால்) உருவாக்கப்பட்ட குண்டலிக்குள் எழும்பும் நாதபிந்து கலந்ததினால் ஏற்பட்ட சிவந்த அக்னியானது உலகத்தாரால் சொல்லும்.  (நஞ்சுக்கொடி உற்பத்தியான) தொப்பூழுக்கு நாலு வீரற் கடைக் கீழ் வரையில் பிரகாசிக்கும்.

குறிப்பு:  மூலம் என்பதை ஆசாரியன் மூலமாகக் கேட்டு கொள்ளும் ஒரு மொழியில் அடங்கினது.  உலகத்தார் அதை அறிந்து கொள்ள முடியாமல் குதமாக நினைக்கிறார்கள்.  மூலபந்தன முதலிய முத்திரைகளிலும் ஆதாராதத்திலும் குதமாகவே, அனுபோகமும் ஞான ரகசியத்தின் கருத்தும் அறியாத தற்கால கல்வி ஞானிகள் வியாக்கியானம் செய்திருக்கிறார்கள்.  மூலம் இன்னது என்று ஏற்பட்டவுடன் உந்தி, யோனி முதலானதும் விசிதமாக விளங்கும்.  இது சத்தியமானதே.


     நாசிக் கதோமுகம் பன்னிரண்ட டங்குலம்
     நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
     மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்தும்
     தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே – 581

விளக்கம்: பிரணவநுனிக்கு அதோமுகமாகிய கீழ்முகத்தில் பனிரண்டங் குல நீளத்தில் (பிரணவத்துக்கும் கீழ் பாகத்தில் நீ மனதை நிறுத்தி தியானிப் பாயேயானால் பெருமை பொருந்திய சித்திகளும் பெரிய யோகங்களும் முதன்மையடைந்து சித்தியைத் தரும். சரீரத்துக்கு எக்காலத்திலும் நாசமாகுங் குணம் இல்லாமல் போய்விடும்.

குறிப்பு:  நாசி என்பது மூக்கு என்று உரை செய்து கொண்டு சாதனை செய்தால் அதற்குப் பயனில்லை, துன்பமே.

     சோதி இரேகைச் சுடரொளி தொன்றிடற்
     கோதில் மரானந்தம் என்றே குறிக் கொண்மின்
     நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
     ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே. – 582

விளக்கம்: சோதியுள்ள வரையின் தீக்சிகையினுடைய பிரமானது தோன்றினால் குற்றமிலாத பரத்தின் ஆனந்த மென்று உறுதியாக அடையாளத்தைக் கொள்ளுங்கள்.  எதிரில் இடைபிங்கலைகளின் மத்தியில் பிரகாசம் பொருந்திய சந்திரனுடைய ஒளியானது வந்து சேர்ந்தால் சொல்ல வேண்டியது உன்னுடலானது தத்போதத்தையடையும் என்பதே.

     மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
     மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
     வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
     காலத்தை வெல்லுங் கருத்திது தானே – 583

விளக்கம்: மூலத்திலுள்ள துவாரத்தை (உபதேசப்படி) பூட்டிக் கொண்டு அசைவற்றிரு.  சுழி முனை துவாரத்தின் மீது மனத்தை நிறுத்து.  கூர்மையான நேத்திரத்தை மூடிக் கொண்டு விடாதே.  காலத்தை வெல்லும் கருத்து இதுவே.

பிரத்தியாகாரம் முழுவிளக்கம்:

     அதோமுகத்திலுள்ள பிந்துகலையைச் சந்திர பேதினி என்னும் தந்திரத்தால் மேலெழுப்பி அது செல்லும் வழியில் உள்ள ஜோதியையும் பிரிவினைசெய்து அதனால் ஏற்பட்ட அறிவின் வழியாக விந்து கலையைக் கரைத்து லயப்படுத்தி உள்நோக்கிப் பார்ப்பதுவே பிரத்தியாகாரத்தின் செயலாகும்.  அவ்விதமாக உள்நோக்கிப் பார்க்கும்போது அதில் மனமானது பொருந்தி நின்றால் பலவகையான குணங்களைக் காணலாம்.

     உந்திக்கமலமாகிய பிரணவத்திலிருந்து பன்னிரண்டு அங்குலத்துக்குக்கீழ் செய்ய வேண்டிய தந்திரத்தை ஆசாரியன் மூலமாகத் தெரிந்து செய்பவர்களுக்கு அதோ முகத்திலிருந்து விந்துகலையானது இரண்டு பிரிவாக மேலெழும்பி அந்த இரண்டுக்கு மத்தியில் சத்தியானவள் பிரவேசிக்க அவளது வலப்புறத்தில் பிரணவயுச்சியில் சிவன் வெளிப்பட்டுக் காட்சி கொடுப்பான்.  நெற்றியில் தரிக்கும் நாமத்தின் குறியும் இதையே தெரிவிக்கின்றது.


     நாத விந்துக்கள் குண்டலியாகிய பிரணவத்தில் கலப்பதினால் ஏற்பட்ட சிவந்த அக்னியானது தொப்புளுக்கு நான்கு விரற்கடை வரையில் பிரகாசிக்கும். சாதகர்கள் பிரணவத்தைக் கண்டு அதன் உச்சியிலிருந்து பன்னிரண்டு விரற்கடைக்குக்கீழ் மனதை அசைவற்ற நிலையில் நிறுத்திச் சங்கல்பமற்று இருப்பார்களேயானால் பெருமை பொருந்திய சித்திகளுக்கும் இராஜ யோகத்திற்கும் காரணமாக நிற்கின்ற விந்து கலையானது பிரணவ உச்சியில் வந்து சேரும். தவிர, தேகமானது நாசமாகும் குணத்தை அடையாது.  பார்வையானது பிரணவ உச்சியின் மீதும், மனமானது அதோ முகத்திலும் நிலைத்து நிற்க, தீச்சிகையானது கண்டத்திற்குக்கீழ் நிற்பதைக் காணலாம்.  அதற்கு மேல் பாகத்தில் சந்திர ஒளியானது கண்ணைக் கவரும் படியாகத் தோன்றும், அச்சமயத்தில் சாதகன் தேகமானது பரவச மடைந்துவிடும். 

Monday, May 18, 2015

4. பிராணயாமம் - (அட்டாங்க யோகம்)4. பிராணயாமம்:

     ஐவருக்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
     உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு 
     மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்
     பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.  -- 564

     பஞ்சேந்திரிய சக்திகளாகிய ஐந்து வர்ணங்களையுடைய ஒளிகளுக்கு நாயகனாகவும், அவைகளிருக்குமிடத்திற்கு முதலாகவுமுடைய மூலாக்கினியான தான் அதிகமாகப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும் குதிரையாகிய பிரணவம் ஒன்று உண்டு.  அது சத்தியமான ஞான சாதனையை யுடையவர்களுகுப் பிடி கொடுக்கும்.  மற்றவர்களாகிய பொய்யருக்குப் பிடிகொடாமல் போய் குதித்துத் தள்ளிவிடும்.

     ஆரிய னல்லன் குதிரை இரண்டுள 
     வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை. 
     கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
     வாரிப் பிடிக்க வசப்படுந்தானே.  -- 565

     ஆரியனாகிய அக்கினியானது மிகவும் நல்லது.  சூரியன் சந்திரன் என்னும் இரண்டு குதிரைகள் இருக்கின்றன (அவைகளை) பிரகாசிக்கச் செய்துப் பிடித்துக் கொள்ளும் உபாயத்தை அரியவர்கள் கிடையாது.  கூர்மையான அறிவையுடைய நாதனாகிய குருவின் அருளைப்பெற்றால் சேர்த்துப் பிடிக்க வசப்பட்டுவிடும்.

     ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் 
     ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
     ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
     மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.

     திசைகளோடு கூடிய உலகமானது அடங்கியிருக்கும் பிரணவத்தினிடத்திலிருந்து சூரிய கலையைப் பதினாறு மாத்திரை யளவாக மேலேற்றுதல் பூரகம்.

     வாமபாகத்திலுள்ள சந்திர கலையை முப்பத்திரண்டு மாத்திரையாக கல்ல வைத்தல் ரேசகம்.

     பிரணவத்தின் நடுவீட்டில் சூரிய சந்திர கலைகளை அறுபத்திநாலு மாத்திரையளவு அசைவற்று நிறுத்தல் கும்பகம் ஆகும்.

பூரகம்:  பூரிப்பை அதாவது கலை (ஒளி) விரிவை செய்வது.

ரேசகம்: சூரிய கலையோடு, சந்திர கலையை ரேசிக்க அல்லது கலக்கும்படி செய்தல்.

கும்பகம்: பிரணவமாகிய கும்பத்தின் அகம்மென்னும் நடு வீட்டில் இரண்டு கலைகளையும் (சூரிய ஒளி, சந்திர ஒளி) சேர்த்தல்.


     பிராணன் வேறு, பிராணனின் அசைவினால் ஏற்படும் வாயுவேறு.  வாசி என்பதைப் பாமரர்கள் மூக்கில் வரும் கழிவு பதார்த்தமாகிய வாயுவென்று உரை செய்வது அடாது.  அப்படி உரை செய்வதினாலே யோகமானது பாமரர்களால் அருவருக்கப்படுகிறது.

     இம்மந்திரத்துக்கு மேற்கோளாக முன் ஔவையார் செய்த குரலின் சிவயோக நிலையில் முன்னமேரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம்பிடி.

     முதலில் இரேசகதைச் செய்து பிறகு பூரகத்தைச் செய்து கடைசியில் கும்பத்தைச் செய்ய வேண்டுமென்பது கருத்து.

     உலகத்தார்  நினைத்துக் கொண்டிருக்கும் கழிவு பதார்த்தமாகிய உஸ்வாச நிஸ்வாசத்தை இந்த முறையில் ஏலாதென்பதைக் கவனிக்கவும்.

     பன்னிரண் டானை பகல்இர வுள்ளது 
     பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் 
     பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் 
     பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே -- 577

     பன்னிரண்டு கலையுள்ள சூரியனுக்கு பகலும், இரவும் இருக்கிறது.  அந்த சூரியனைப் பக்குவஞ் செய்யும் சாதகன் அறியவில்லையே.  அறிந்தபின் சூரியனுக்கு இரவும் பகலும் அற்றுவிடும்.


விளக்கம்:  பிராயணாயாமமாவது சத்தியம்சமாகிய பிராணனையும், சிவ அம்சமாகிய அபானனையும் பிரணவத்தின் மத்தியிலுள்ள விஷ்ணு ஸ்தானத்தில் சேர்த்து மேலெழுப்ப வொட்டாமல் தடுத்தலாகும்.


     பிராணாபானனைத் தெரிந்துகொள்ள வேண்டியவர்கள் ஆசாரியன் மூலமாய்த் திருவடிகளைத் தரிசிக்க வேண்டிய தந்திரத்தை அறிந்து பிறகு அதன் மூலமாகச் சூரிய சந்திரர்களைக் கண்டு அவைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் உபாயத்தைச் செய்து அவை சேர்ந்தவுடன் எழும்பும் அக்கினியைக் கண்டு அதை மேலே நோக்கும்படி செய்தால் பிராணாபானனைக் காணக்கூடும்.

     திருவடி என்பது எது என்பதை நமது  ஞானசற்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள் மெய்ஞான உபதேசம் வாயிலாக எவ்வித ரகசியமுமின்றி உலக மக்கள் அறிய "திருவடி உபதேசம் " வீடியோவாக அளித்துள்ளார் கிளிக் செய்யவும்.

பிராணாபானனைச் சேர்க்கும் தந்திரம்: 

     பஞ்சேந்திரிய சத்திகளின் ஒளிகளுக்கு மூலகாரணமாக மூலாக்கினியானது அதிகமாய்ப் பிரகாசிக்கப் பிடித்து ஏறும்படியான பிரணவமாகிய குதிரையானது, உண்மையான யோக சாதனையை யுடைவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும்.

     சூரியன், சந்திரன் என்னும் இரண்டு குதிரைகளையும் பிரகாசிக்கச் செய்யும் தந்திரத்தைச் செய்தால், அக்கினியின் பிரகாசதத்தைப் காணலாம்.

     பட்சியைப் பார்க்கிலும் பறப்பதில் வல்லமையுடைய பிரணவத்தை மேலே கொண்டு போனால் தனக்குத்தானே ஆனந்தத்தைக் கொடுக்கும்.  அபானனை வெளிப்படுத்தி மேல்நோக்காகச் செலுத்தும்.  சோம்பலை ஒழித்துவிடும்.  பிராணனும் மனமும் விட்டுப் பிரியாமலழுந்திப் பிராணனிலுள்ள அசைவு நீங்கினால் பிறப்பு இறப்பு ஒழிந்து விடும்.  இதை விட்டுப் பிராணனுடைய நடையினால் ஏற்படும் பேசும் சத்தம் மாத்திரம் வெளிப்படுவதால் உண்டாகும் அற்பப் பெருமையையடைந்து உலகம் சந்தோஷிக்கின்றது.

     திசைகளோடு கூடிய உலகம் அடங்கியிருக்கும் பிரணவத்திலிருந்து பிராணனாகிய சூரியகலையைப் பதினாறு  மாத்திரையளவாக மேலேற்றி மறுபடியும் பிரணவத்தின் மத்திய பாகத்தில் கொண்டு வந்து சேர்ப்பது பூரகமாகும்.

     இடது பக்கத்திலுள்ள அபானனாகிய சந்திரகலையை முப்பத்திரண்டு மாத்திரையளவாக சூரியகலையோடு சேர்ப்பது இரேசகமாகும்.

     இந்த இரண்டு கலைகளையும் பிரணவத்தின் மத்தியில் சேர்த்து அசைவற்றிருத்தல் கும்பகமாகும்.

      பூரகம் பூரிப்பையுடையதாகும்.  இரேசகம் சூரியனோடு இரேசித்தலாகும்.  கும்பகம் பிரணவத்தின் மத்தியில் பிராணாபானனை லயிக்கச் செய்தலாகும்.  பிராணாபான வாயுக்களை இரேசக பூரக கும்பகாதிகளால் வாங்கிப் பிரணவத்தின் மத்தியில் பிரகாசிக்கும் வீட்டில் அடைத்து வைப்பதனால் முதியோனாகினும் இளையோனாய்ப் பளிங்குக் கல்லைப் போலாவான்.  மாத்திரைகள் அப்பியாசிகளுக்கு முதலில் உபயோகமானவை.

     பார்வையை உபயோகப்படுத்துவதிலேயே எல்லா யோகதந்திரங்களும் அடங்கி இருக்கின்றன.  பார்வையைச் சூரியகலையினிடத்தில் நிறுத்தி, இடகலையினால் பூரகத்தைச் செய்ய, சூரியகலையானது அதிகப் பிரகாசத்தை அடையும்.  சங்குத்தொனி உண்டாகிற வரையில் சூரிய கலையைப் பார்வையோடு செலுத்திப் பூரகஞ் செய்ய வேண்டியது.

     பிராணாபானன்களையும் பார்வையையும் மேல் ஏற்றுவதும் இறக்குவதுமாகிய வழியை அறிந்து கொள்பவர்கள் கிடையாது.  அறிந்து கொண்ட யோகிகளிடத்தில் எமனுக்கு வேலை கிடையாது.  பிரணவத்திற்கு மேல் பாகத்திலும், கீழ்பாகத்திலும், கலைகள் எழும்புவரை பூரித்து, லக்ஷ்மீகரம் பொருந்திய உந்திக்கமலத்தில், சூரிய கலைகள் ஆகிய இவைகள் சேரும்படி செய்தால் மாயையாகிய இருள் நீங்கப்பெற்று சிவத்தின் அருளை உடனே அடையலாம்.

     பிங்கலையினால் சூரிய கலைகளைச் சந்திர கலைகளில் சேர்த்துப் பரவிமேலெழும்பும்படி பதினாறுமாத்திரை அளவு பூரிக்க வேண்டியது.  இடகலையினால் சந்திர கலைகளைச் சூரிய கலைகளில் கலக்கும்படி முப்பத்திரண்டு மாத்திரை அளவு இரேசிக்க வேண்டியது.  பிறகு இரு கலைகளும் பிரணவ பீடமாகிய உந்திக் கமலத்தில் சேரும்படி அறுபத்தினாலு மாத்திரை அளவாகக் கும்பிக்க வேண்டியது.

     இவ்விதமாக எல்லாத் கலைகளும் சேர்ந்த உந்திக் கமலமானது கலைக் குறைவை அடையாதபடி சந்திரனால் அதிகமாக இரேசிக்க இடா, பிங்கலா, சுழிமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், குரு, சங்கினி ஆகிய இந்த தசவித நாடிகளும் கனத்தை அடைந்துவிடும்.  அப்போது பிராணாபான வாயுக்கள் பிரணவ உச்சிக்குச் சென்று  பரிசுத்தமாகும்.  இதனால் தேகம் சிவந்த நிறத்தை யடைவதோடு சிவம் தேகத்தை விட்டுப் பிரியாது.  மேலும் ஐந்து இந்திரிய சத்திகளும் நக்ஷத்திர கலைகளுஞ் சேர்ந்து ஆக ஒன்பது கலைகளாகிய சத்திகளும் (நவசக்தி) பிரணவமாகிய வீட்டை ஏற்படுத்தி அதில் வகிப்பதற்காக ஓடிவரும்.  மறுபடியும் திரும்பிவிடும்.

     இப்படி பலதடவைகளில் ஓடிவருவதும் திரும்பிப் போவதுமாயிருக்கும் சமயத்தில் பார்வையைத் தந்திரமாக மேல் நோக்கினால் எல்லாம் ஒன்று சேரும்.  அப்போது பன்னிரண்டு அங்குள அளவிற்குமேல் சென்று சாதகன் எட்டு அங்குல நீளத்தில்தன் பார்வையின் தந்திரத்தால் துண்டித்துப் பிரித்துவிட்டால் அந்த நாளு விரற்கடை நீளமுள்ள கலைகள் ஒன்று சேர்ந்து பஞ்சாக்ஷர சொரூபமாக விளங்கி நிற்கும்.

     இந்தப் பிராணாயாம அப்பியாசத்தினால் சூரிய சந்திர அக்கினிகளையும் பிரணவத்தையும் தரிசித்துப் பிரணவத்தின் மத்தியிலுள்ள உந்திக் கமலத்தையும் திறந்து விடலாம்.

     உந்திக்கமலமே மௌன பீடமாகவும், நாபிக் கமலமாகவும், இருதயகுகையாகவுமிருந்து திறக்கப்பட்டவுடனே ஞானச் செல்வங்கள் வெளிப்பட்டுவிடும்.   

Saturday, May 16, 2015

3. ஆதனம் - (அட்டாங்க யோகம்)3. ஆதனம்:

     பங்கய மாதி பர்ந்தபல் ஆதனம் 
     அங்குள வாம் இரு நாலும் அவற்றினுள் 
     சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத் 
     தங்க இருப்பத் தலைவனு மாகுமே.   -- 558

     பத்மாசனமாகிய பல வகைப்பட்ட விரிவான ஆசனங்கள் (சொல்லி இருப்பதில்) எட்டு ஆசனங்கள் முக்கியமானதாயிருக்கின்றன.  அதற்குள் மயக்கத்தைத் தராத சுவத்திகாசனம் என்பதில் இருந்து தங்க ஆசனத்தில் முதன்மையானவனாகும்.

     நாடிதாரணை யோகத்துக்கு அவசியமானபடியாலும், நாடிகளில் அதிசூட்சும நாடிகளின் கூட்டம் தேகத்தில் அதிகமிருப்பதாலும் அந்த நாடிகளுக்கு அசைவை உண்டாக்கிக் கொள்ளாமலிருக்கத் தேகத்தை ஸ்திரமான தன்மையில் வைக்கும் தந்திரம் ஆசனமாகும்.  இதில் முக்கியமானவை பத்மாசனமும், சித்தாசனமும், சுகாசனமுமாகும்.  இவ்வாசனங்களில் வீற்றிருக்கும்போது சிரம், கழுத்து, இடுப்பு முதலியவைகளை வளைக்காமல் இருக்கவேண்டும்.

Thursday, May 14, 2015

2. நியமம் - (அட்டாங்க யோகம்)2. நியமம்: 

     ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
     சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
     பாதியுன் மன்னும் பராசத்தி யோடுடன்
     நீதியுணர்ந்து நியமித்த னாமே  - 555

பரசிவத்தை வேதங்கள் கூறும் அப்பொருளை அனுசரிக்கிறவனை சோதியை அந்தவிடத்தில் சுடும்படியான அக்கினியைப் பாதி பாகத்தில் சேர்ந்திருக்கும் பராசத்தியுடன் இவற்றை நியாயமான வழியில் அறிபவன் நியமத்தனாகும்

     தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
     வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
     காமங் களவு கொலையெனக் காண்பவை
     நேமியீ ரைந்து நியமத்த னாமே.  -- 556

பரிசுத்தம், அருள், உள்ளடக்கம்,  பொறுமை, இணக்கம், சத்தியம், ஸ்திரத்தன்மை கொள்ளுதல் இவையல்லாமல் காமம், களவு, கொலை என்பவைகளைத் தீமையெனக் காண்டல் முதலியவை பூமியில் இந்தபத்தும் நியமமாகும்.


குறிப்பு: அரசன், கல்விமான், பணக்காரன், அறிவாளி இவர்கள் தக்க நிலைமையை அடைந்திருந்தும் தங்களுக்குச் சம்பந்தமில்லாத காரியத்தில் பிரவேசித்து இழிவான தன்மையை அடைவதுபோல, மனிதன் உலகத்தில் பிறந்து யுக்த வயதடைந்தவுடன் பார்வையினாலும், சேர்க்கையினாலும் சம்பாதித்துக் கொள்ளும் காரியங்களாகிய, பிறர் தம்மை மதிக்கவேண்டிய தென்கின்ற கொள்கை, பற்று, தன்னறிவைப் பெரிதாகக் கூறல், பதார்த்தங்களில் இச்சை, அவசியமில்லாததை உபயோகித்தல், டாம்பீகமாக நடத்தல் என்னும் இவை போன்றதை நியமித்துக் கொண்டு இழிவையடைதல் சகஜம்.  அவ்வாறின்றி, மேற்சொன்ன குணங்களை நீக்குவதே நியமமாகும்.

1. இயமம் - (அட்டாங்க யோகம்)1.  இயமம்:


     கொல்லான் பொய் கூறான் களவிலான் என்குணன்
     நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
     வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
     இல்லா னியமத் திடை நின் றானே - 554


கொலை செய்யாமை (ஜீவ இம்சை செய்யாதிருத்தல், ஜீவனுக்கு உதவியாய் இருக்கும் விந்துவை நாசம் செய்யாதிருத்தல்)

பொய் சொல்லாமை, திருடாமை, பிறரால் தூஷணையடையாமை, அடக்கமுடைமை, நடுவுநிலைமையான வார்த்தையைச் சொல்லவல்லான், முடிந்தமட்டில் அன்னமிட்டு உண்ணுதல் (ஐயமிட்டு உண்ணுதல்) ,
குற்றமில்லாமை, குடியும் காமமில்லாமை, இவைகளையுடையவன் இயமத்தினிடை நிற்பவனாகும்.

     ஒரு அரசன், கல்விமான் தனவந்தன், அறிவாளி என்னும் பதவிகளில் தங்களை அமைத்துக்கொள்ள விருப்பமுடையவர்கள் அந்த லட்சியங்களுக்குத் தகுந்தது போல் தங்கள் நடையுடை பாவனைகளை மாற்றிக்கொள்வதுபோல, ஞானி என்னும் நிலையைப் பொருத்தமாக்கிக் கொள்ளவேண்டிய ஒரு சாதகன் மனித தேகத்துக்கு இயற்கையாகப் பொருந்தியிருக்கும் ஞான விரோதச் செயலை நீக்குவது, அதாவது சுக்கிலத்தைக் கழித்தலையும், கோபம், காமம், பஞ்சேந்திரியங்கள் ஆகிய இவற்றை வீணான காரியங்களுக்கு உபயோகித்தலை ஒழிப்பதாகும்.


குறிப்பு: ஐயமிட்டு உண்ணுதல் - ஐ - ஐயன் தலைவன், அருட்பெரும்ஜோதி ஆண்டவன் நம் தலைவன்.  அவனுக்கு ஆவியை இட்டு உண்ண வேண்டும்.  ஆவியே ஆண்டவனுக்கு நெய்வேத்தியம் (உள்ளுறையும் ஆவி நெய் வேத்தியம் என்று தாயுமானவர் கூறியதை சிந்திக்கவும்).  அதாவது நாம் உண்ட அன்னத்தின் பயனாகிய ஆவியை இறைவனுக்கு அர்ப்பணித்து அதன் பிறகே உண்ண வேண்டும்.

     உண்மையான நைவேத்தியம் என்ன என்பதை தக்க குருவிடம் கேட்டு தெளிவு பெறவும். 

அட்டாங்க யோகம்

அட்டாங்க யோகம்         உலகத்தின் கண் அறிவாளிகளாகிய ஞானிகளால் பிரித்துக் கூறப்பட்ட யோகா தந்திரங்கள் பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம் என்று ஒரு சாராராலும்,

     கிரியா யோகம், மந்திர யோகம், அடயோகம், லயயோகம் என்று மற்றொரு சாராராலும்.

    சாங்கியம், தாரகம், அமனஸ்கம் எனப் பிறிதொரு சாராராலும் வழங்கப்படுகின்றன.

     இராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவர் யோகத்தின் எட்டு படிகளை விளக்கி உள்ளார். இந்த எட்டு நிலைகளும் வரிசைக்கிரமமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு நிலை முடிவடையும் தருணத்தில் மறுநிலை ஆரம்பமாகும். முதல் நிலை, இரண்டாம் நிலை என எட்டு நிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடக்க வேண்டும். ஒரு நிலை முடிந்தவுடன் அடுத்தது. ஒரு நிலையைப் பயிலாமல் அடுத்த நிலைக்குச் செல்லவியலாது.

     எடுத்தவுடனேயே யோகாசனம் செய்தலோ அல்லது தியானத்தில் ஈடுபடுதலோ யோகத்தின் உரிய பலனைத் தராது. விடாமுயற்சியும், தொடர்பயிற்சி செய்வதன் மூலம் இந்த எட்டு யோக நிலைகளும் வசமாகும். எட்டு நிலைகளைக் கொண்டுள்ளதால் இது சமசுகிருதத்தில் அஷ்டாங்க யோகம் (அட்டாங்க யோகம்) என்று விளக்கப்படுகிறது.     அட்டாங்கத்தின் கருத்தினைத் திருவருட்பிரகாச வள்ளலார் "வருகைக் கண்ணி"யில் குறிப்பிடுவதாவது.

     எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல்
     எட்டுபடி செய்தீர் வாரீர்
     எட்டுரு வாயினீர் வாரீர்
     எட்டுரு என்பது அகர உரு.  அகரமே ஜீவன்.   - வள்ளலார்

     சாதியையும் ஒப்பற்ற சுடராயுள்ள ஆண்டவன் தேகத்துகுள்ளிருக்கும் ஜீவனுமாகும்.

     எட்டு என்பது தமிழில் "அ" அத்துடன் "ரு" சேர்த்தால் "அரு" என்று ஆகும்.  அரு என்பது அணு.  அணு என்பது ஒளி.  இதனை அணுவில் அமைந்த பேரொளியே என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டுருப்பதும் சிந்திக்கத்தக்கது.


     எட்டுருவாகிய அணுவில் அமைந்த பேரொளியை உள்ளத்தில் அறிந்து, அதில் நினைவை ஒன்றுபடுத்தி தியானிப்பதுவே அட்டாங்க யோகமாகும்.

தகுந்த ஆசாரியன் மூலம் மெய்ஞானம் உபதேசம் பெற்று மெய்ப்பொருள் அறிந்து திருவடி தீட்சை பெற்று தவம் செய்கையில் இவை கைகூடும்.


    அட்டாங்க யோகத்தை பற்றி நாம் பார்ப்போம்.

திருமந்திரம்:

     இயம நியமமே எண்ணிலா ஆதனம்
     நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
     சயமிகுதாரணை தியானஞ் சமாதி
     அயமுறும் அட்டாங்க மாவது மாமே - திருமூலர்  (552)


     நன்மையைக் கொடுக்கும் அட்டாங்க யோகமாவது

1. இயமம்
2. நியமம்
3. கணக்கற்ற ஆசனங்களும்
4. ஊதியத்தைத் தரும் பிராணாயாமம்
5. பிரத்தியாகாரம்
6. வெற்றியைத் தரும் தாரணை
7. தியானம்
8. சமாதி  -  என எட்டு வகைப் படும்.

   அடுத்தடுத்து ஒவ்வொன்றாக பார்ப்போம்....

Wednesday, May 13, 2015

தசாவதார விளக்கம்

பத்து அவதாரங்கள்:
1. மச்சாவதாரம்:     முதன் முதலில் தண்ணீரில் தான் ஜீவசக்திகள் உண்டாயின.  அதாவது நம் கண்களுக்குத் தெரியாத ஜீவ அணுக்கள் உண்டாகிப் பாசியாக மாறிப் புழுபூச்சிகளாகின.  இப்படி எத்தனையோ வகையான உயிர் இனங்கள் உற்பத்தியாகிவிட்டன.  பொதுவாகத் தண்ணீரில் மீன் இனங்கள் தான் அதிக அளவில் பெருகிவிட்டன.   இதை மச்ச (மீன்) அவதாரமாகக் கொண்டனர்.


2. கூர்மாவதாரம்:      தண்ணீருக்கும் தரைக்கும் ஊர்ந்து செல்ல ஜீவப் பிரயத்தனம் உண்டாயிற்று.  அதாவது, மீன் தரைக்கு வர முடியாது.  தவளையும் ஆமையும் தண்ணீருக்கும் தரைக்கும் வந்துபோய் கொண்டிருக்கும்.  இதில் தவளை தண்ணீரில் முட்டையிட்டு இனப் பெருக்கத்தை உண்டாக்கும்.  ஆனால் ஆமை தரையில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கத்தை உண்டாக்கும்.  தரையில் முதன்முதலில் உண்டான உயிர் இனம் ஆமை.  இதைக் கூர்மை (ஆமை) அவதாரமாகக் கொண்டனர்.


3. வராகவதாரம்:      இதன்பிறகு பூமியில், இடத்திற்குத் தகுந்தாற்போல், சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு பலதரப்பட்ட மிருக இனங்கள் உருவாயின.  இதில் பன்றி இனம் மட்டும், எல்லா மிருகங்களையும் விட மோசமானது.  மலத்தைத் தின்று, சேற்றில் புரளும்.  மண்ணைக் கிளறி புழுப் பூண்டுகளைத் தின்னும்.  அடிக்கடி பல குட்டிகளைப் போடும்.  அறிவு இன்றி முட்டாள் தனமாக நடந்து கொள்ளும்.  அதனால் தான், பன்றியை ஒன்றும் புரியாத ஆரம்பக்கால மிருகமாகவும், நிறைய, அதிகமான குட்டிகளைப் பெறுவதினாலும், மிருக இனங்கள் அதிக அளவில் உருவாகி விட்டன என்பதை உணர்த்தவே, வராக (பன்றி) அவதாரமாகக் கற்பித்தனர்.


4. நரசிம்மாவதாரம்:     இந்தக் காலத்து ஆராய்ச்சியில், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள், மிருகத்துக்கும் மனிதனுக்கும் தொடர்பு உண்டு, மிருகத்திலிருந்து தான் மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்றார்கள்.  அவர்களுக்குச் சரியாகப்புரியவில்லை என்றாலும், மனிதன் ஏதாகிலும் ஓர் இன மிருகத்திலிருந்துதான் உருவாகி இருக்க வேண்டும் என்றே முடிவு செய்தார்கள்.  அப்படி மிருகத்திலிருந்து உருவான ஆதி மனிதர்களுக்குச் சிந்தனையற்ற மிருக அறிவுதான் இருக்கவேண்டும் என்றும் நினைத்தனர்.  இந்த எண்ணத்துடன், மிருகங்களுக்கு அரசனான சிங்கத்தின் தலையையும், மனிதனின் உடலையும் சேர்த்து ஒரு உருவமாகக் கற்பனை செய்தனர்.  இதையே நரசிங்க அவதாரமாகக் கூறினர்.


5. வாமனாவதாரம்:     இதன்பிறகு, மனிதர்கள், குள்ளமான உருவ அமைப்புடன் சிந்திக்க ஆரம்பித்து, பகுத்து அறியத் தெரிந்து கொண்டார்கள்.  உலகில் வாழவும் புரிந்து கொண்டார்கள்.  அனால், அளவு கடந்த ஆசையுடன் பிறர் பொருளைத் தந்திரமாக அபகரிக்கவும் நினைத்தனர்.  இதையே வாமன அவதாரமாக உருவகித்தனர்.


6. பரசுராமாவதாரம்:  இதன்பிறகு, தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து, நீர் வளமுள்ள காடுகளைத் தேர்ந்த்தெடுத்து, மரங்களை வெட்டிச் சீர்படுத்தி, நாடு நகரங்களாகச் செப்பனிட்டுக் குடும்பம் குடும்பமாக வாழ மனிதர்கள் ஆரம்பித்தார்கள்.  அப்பொழுது மிருகங்களால் ஏற்படும் தொல்லைகளைச் சந்தித்தனர்.  வெவ்வேறு கூட்டத்தார்கள் அடிக்கடி வந்து, சண்டை சச்சரவுகளோடு போராடினார்கள்.  பெண்களையும், பொருள்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போனார்கள்.  இதையெல்லாம் சமாளிக்கத் தாடிமீசையுடன், எப்பொழுதும் கோடாலியைக் கையில் ஏந்தியபடியே இருப்பார்கள்.  மிருகத்தைத் தாக்கவும், எதிரியை வெல்லவும், மரம் வெட்டவும், விறகைப் பிளக்கவும் ஒரே ஆயுதமாகக் கோடாலியைப் பயன்படுத்தி வந்தார்கள்.  சிலர் குடும்பம் நசித்துவிட்டால் தவம் செய்ய மலைக் குகைகளுக்குச் சென்றுவிடுவார்கள்.  அப்பொழுதும் கூடக் கையில் கோடாலி இருக்கும்.  இதையே பரசுராம அவதாரமாகக் கூறினர்


7. இராமாவதாரம்:      இதன் பிறகு நாகரீகம் வளர்ந்து, இடத்திற்கு ஏற்றாற்போல் மன்னர்களின் ஆட்சிகள் உண்டாயின.  வில், வேல், வாள் இன்னும் சில ஆயுதங்களால் போரிடும் பயிற்சிக் கூடங்களும் எழுந்தன.  போர்த்தளவாடங்களும் உருவாயின.  மக்கள் அனைவரும் வீரர்களாகவும், நாட்டுப் பற்றுக் கொண்டவர்களாகவும், ஒருவனுக்கு ஒருத்தி என்று கற்பு நெறி தவறாதவர்களாகவும் இருந்தார்கள்.  ஒரு மன்னன் பல மன்னர்களை வென்று வெற்றி வாகை சூடிப் பெரும் சாம்ராஜ்யங்களை அமைத்தான்.  இதில் மக்கள் அனைவரும் அன்பு கொண்டவர்களாகவும் நீதி, நியாயம், உண்மை, இப்படிப் பல நற்குனங்களுடனும், சத்தியத்துடனும் வாழ்ந்து வந்தார்கள்.  இப்படி ஆண்ட அரசர்களும் அநீதியை அழித்து, நீதியை நிலை நாட்டி, நேர்மையுடன் அரசு பரிபாலனம் செய்து வந்தார்கள் இதையே இராம அவதாரமாகக் கூறினார்.

8. பலராமாவதாரம்:     இதன் பிறகு அரசும் மக்களும் ஒன்று கூடி தொழிற் கூடங்களும், அறிவுக் கூடங்களும், ஆராய்ச்சிக் கூடங்களும், பயிற்சிக் கூடங்களும் அமைத்தார்கள்.  இதில் ஓயாது உழைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.  பெரும்பாலும் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு, ஒவ்வொருவரும்.  கலைப்பையைத் தோளில் சுமந்தார்கள்.  உழவைத் தெய்வம் எனக் கருதி நிலத்தில் உழுது பாடுபட்டார்கள். பஞ்சம், பசி, பட்டினி என்பன இவர்களுக்குத் தெரியாது.  சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள்.  திருவிழாக்களைக் கோலாகலமாக நடத்துவார்கள்.  எப்பொழுதும் முகமலர்ச்சியுடன் இருப்பார்கள்.  இவர்கள் கள்ளம் கபடு தெரியாதவர்கள்.  இதையே பலராம அவதாரமாகக் கூறினர்.

9. கிருஷ்ணாவதாரம்:     இதன் பிறகு மனிதர்களுக்கு அறிவு வளர வளர, சூது, சூழ்ச்சி, வஞ்சகம், சதி இத்தகைய கொடிய எண்ணங்கள் இவர்கள் மனத்தில் உருவாகின.  இதனால் மனிதர்கள், பற்று, பாசம், உறவு என்பதைக் கூட நினையாமல், சூதுசெய்து சூழ்ச்சியில் இறங்கினர்.  வஞ்சக நெஞ்சத்தால், சாதியின் வேகத்தால், மன்னர்கள் ஒருவருக்கொருவர் இறக்கம் காட்டாமல், விளையாட்டாகச் சிரித்துதுக் கொண்டே போர்க் காரியத்தில் ஈடுபடுவார்கள்.  வெற்றி கொண்டவர்கள் நாடாளவும், தொல்வியுள்ளவர்கள் எல்லாம் இழந்து, நாட்டைவிட்டு வெளியே போகவும் நேரும்.  இப்படி எத்தனையோ கொடிய செயலில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு, பயங்கர யுத்தங்கள் நடத்தினர்.  இதில் கோடிக்கணக்கான மக்கள் மாண்டனர், இறந்தவர்களுக்கு வீர சொர்க்கம் உண்டென்றனர் இருப்பவர்கள் மன்னன் கட்டளைப்படி நடந்தால் இராஜ பக்தி என்றனர்.  இப்படிக் பொய் பித்தலாட்டத்தில் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள்.  இதையே கிருஷ்ண அவதாரமாகக் கற்ப்பித்தனர்.


10. கல்கி அவதாரம்:      ஜீவர்கள் ஆசையின் மோகத்தால், பல பிறவிகள் தோறும் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஈடாய், ஜெனன மரண துக்கங்களை அனுபவித்துக் கடைசியாய் மனிதப்பிறவி எடுத்துள்ளனர்.  இறைவனை அடைய வேண்டிய மார்க்கங்களைத் தெரிந்து தெளிந்து, அதன்படி ஒழுகி, ஞான அனுபவங்களைப் பெற்று, மனித உடலை அழித்து, ஐம்பூதத்தில் ஒன்றில் சேர்த்துவிட்டு, ஜீவனானது சச்சிதானந்த சொரூபமான இறைவனோடு இரண்டறக் கலத்தல் வேண்டும்.  அதாவது ஜீவாத்மாவானது, பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகவேண்டும்.  இதையே கல்கி அவதாரமாகக் கற்பித்தனர்.


     இவை எல்லாம் உலக வளர்ச்சியின் பரிணாமக் தத்துவங்கள்.  இதைக் கற்பனையாகக் கதை வடிவில், உண்மையாக நடந்தாற் போல், இடம், சம்பவம், பாத்திரங்களை எல்லாம் நன்றாக அமைத்து, வெகு நேர்த்தியாகப் பாகவதப் புராணமாக இயற்றியுள்ளார்கள். 


உலகத்தின் தத்துவம்     ஆகாயம் நீராமயமாய் ஒன்றும் இல்லாத வெட்ட வெளியாய் இருந்தது.  இதி "ம்" என்ற சப்தம் மட்டுமே ஒலித்து கொண்டிருந்தது. இதுவே ஆகாயத்தின் குணமாகும்.


     இதில் "ம்" என்ற சப்த ஓசையிலிருந்து, காற்று உண்டாயிற்று.  "உஸ்" என்ற சப்தத்துடன் ஸ்பரிசம் உண்டாயிற்று.  இது காற்றின் இரண்டு குணங்களாகும்.

     காற்றின் வேகம் அதிகரிக்க, அதிலிருந்து நெருப்பு உண்டாயிற்று.  இதி "உஸ்" என்ற சப்ததும், பரிசமும், ரூபமும் உண்டாயிற்று.  இது நெருப்பின் மூன்று குணங்களாகும்.


     நெருப்பின் ஜுவாலையால் ஆவி உண்டாக்கி, அது நீராவியாக மாறித் தண்ணீர் உண்டாயிற்று.  இதில் சலச்சல என்ற சப்ததும், ஸ்பரிசமும், ரூபமும், ரசமும் உண்டாயிற்று.  இது தண்ணீரின் நான்கு குணங்களாகும்.

     தண்ணீர் நிறைந்த உடன் அதில் ஏடுகட்டி அடியாகி மண் உண்டாயிற்று.  இதில் கடக்கட என்ற சப்ததும், ஸ்பரிசமும், ரூபமும், ரசமும், கந்தமும் உண்டாயிற்று.  இது மண்ணின் ஐந்து குணங்களாகும்.

     ஆகாயம், காற்று, நெருப்பு, தண்ணீர், மண் இவை ஐந்தும்  சேர்ந்து உருண்டை வடிவமாக, உலகம் என்னும் இந்தப் பூமண்டலம் உருவாயிற்று.

     இதுபோல் சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி, யுரேனஸ், நெப்டியூன், நட்சத்திரங்கள் ஆகியவையும் தோன்றின.  இவை யாவும் பூமியைப் போல் பூ மண்டலங்களே.  இவை அத்தனையும் ஆகாயம் என்னும் வானவெளியில் சதா சுழன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

Tuesday, May 12, 2015

தீட்டு (பஞ்சமா பாதங்கள்)

தீட்டு - (பஞ்சமா பாதங்கள்) 
     தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.  தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.  தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.


    ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே!   அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.


     தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.  இதுவல்ல உண்மையான தீட்டு.  இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு.  இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள்.  அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

     தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!


1. காமத் தீட்டு: 

     காமம் என்பது ஆசை.  நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம்.   அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.  அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும்.  இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும்.  இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

2. குரோதத் தீட்டு: 

     குரோதம் என்பது கோபம்.  யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.  சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள்.  சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.  கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.  கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,

      கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன.   ஆயுளும் குறைந்து விடுகிறது.  கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள்.  இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர்.  குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

3. லோபத் தீட்டு:

     லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இறக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற  எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே.  இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

4. மதத் தீட்டு:

     மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது.   எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது.  தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது.  ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது.  இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?  இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர்.   அதைத் தீண்டாதே என்பர்.   கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.


5. மாற்சரியத் தீட்டு: 

     மாற்சரியம் என்பது பொறாமை.  பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது.  எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது.   எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.


     தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம்.  பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள்.  தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.  இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர்.  இதுதான் ஐந்தாவது தீட்டு.


     இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.  இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது.  இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.  இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான்.  நம் உடலில் இருக்கும் சத்துபோய்விட்டால், பிணம்தான்.  (இதைத்தான் செத்துப் போய்விட்டான் என்பது) பிணம் ஆனபிறகு  இறைவனை அடையமுடியாது.

     சிவலோகப் பதவி, வைகுண்டப் பதவி என்பதெல்லாம் உடலுக்கு இல்லை.  பிணத்தைச் சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள்.  உயிர் எங்கு சென்றது என்பதே யாருக்குமே தெரியாது.  சத்து என்னும் உயிரே இறைவன் இதை உணர்ந்து உண்மையைக் தெரிந்து கொண்டால், எல்லாம் நமக்குப் புரியும்.   அரிவாள் உயர்ந்து, அன்பால் தழைத்தால், அருள் தானே நம்மை வந்தடையும்.

ஞான அனுபவ நிலை

விந்து குண்டலினி:

     நம் மூலாதாரத்தில் விந்துக் குண்டலினி பாம்பைப் போல் சுருண்டு படுத்துறங்கும்.  இதை ஞான சாதனை அப்பியாசத்தால் தட்டி எழுப்பினால், அது விழித்தெழுந்து பாம்பைப் போல் சீறிப் பாய்ந்து மேலே கிளம்பும் வேகத்தில், இங்கு ஓர் ஆவி உருவாகி, உச்சிக்கு நேர்முகமாகக் காற்றின் வேகத்தில் புறப்பட்டுச் செல்லும்.  இந்த ஆவியின் பெயர் நாதக் குண்டலினி.


     இந்த இடம்தான் திருப்பெருந்துறைக் கோயில் குறிப்பதாகும்.


     சீறிக் கிளம்பிய விந்துக் குண்டலினி, முதுகுத் தண்டான வீணாதண்டத்தின் உற்புறம் உள்ள, சுழுமுனை நாடியின் வழியே மேலேறிச் செல்லும்.


     இந்த இடம் தான் திருவையாற்றுச் கோவில் குறிப்பது.


சோமவட்டம்:

     நம் தலையில் பின்புறம், பிடரியில், மிளகுப் பிரமாணம் ஒரு கண் இருக்கின்றது.   இந்தக் கண்ணில் பிறர் பார்வைப் பட்டால் நம்மை அறியாமலே திரும்பி பார்ப்போம், இதை மறைக்க நம் முன்னோர்கள், பிடரியில் தலைமுடியைக் குடுமியாகக் கொண்டிருந்தனர்.  முதுகுத் தண்டின் உட்புறம் வழியாக வந்த விந்துக் குண்டலினி, இந்தப் பிடரிக் கண்ணில் சென்று மோதியதும், ஓர் ஒளிப் பிரகாசம் உண்டாகும்.  இதைச் சோமவட்டம் என்பார்கள்.


     இதைத்தான், கடவுளின் உருவப் படங்களிலும் மகான்களின் உருவப் படங்களிலும், தலைக்குப் பின்னால் வட்ட வடிவில் ஜோதி சொரூபமாக வரைந்து இருக்கின்றார்கள்.

உச்சிக்கண்:

     நம் தலையின் உச்சியில் கடுகுப் பிரமாணம் ஒரு கண் இருக்கின்றது.   பிடரியில் இருந்து மேலே புறப்பட்ட விந்துக் குண்டலினி, தலையின் உச்சிக்கு வந்து சேரும்.  அப்பொழுது, உச்சிக் கண்ணின் கூச்சத்தால், தலைக்குமேல், வட்ட வடிவில் ஓர் ஒளிப்பிரகாசம் உண்டாகும்.  இதைத்தான் சில மகான்களின் உருவப்படங்களில் தலைக்குமேல் ஒளி வட்டமாக வரைந்து இருக்கின்றார்கள்.


     நம் நெற்றியில், புருவநடுவில், ஊசி முனையின் பத்தில் ஒரு பாகமாக ஒரு கண் இருக்கின்றது.   உச்சியில் இருந்து  ஊர்ந்து வந்த விந்துக் குண்டலினி அமிர்த தாரையைப்போல் நெற்றியில் ஒழுகி, புருவநடுவைக் குடைந்து, ஏழு சவ்வுகளை நீக்கி, நெற்றிக் கண்ணில் வந்து பொருந்தும், அப்பொழுது மூன்று சுடர்களின் பிரகாசம் உண்டாகும்.  இதைத்தான் சூரியநாடி, சந்திர நாடி, அக்னி நாடி என்பார்கள்.

     இது ஞானிகள் அனுபவிக்கும் ஞானச்சுடர் நிலை இதற்கு முச்சுடர் நிலை, முச்சுடர், மூவிதழ், முப்பாழ், மஹாமேரு, லாடம், ஆக்கினாஸ்தானம் என்று பல பெயர்கள் உண்டு.  இதிலிருந்துதான் உத்தரவுகள் எல்லாம் பிறக்கின்றன.  எல்லா மதத்தினரும் தம்மை அறியாமல், தம் கைகளால் நெற்றி நடுவைத் தொட்டு வணங்குகின்றதும் இதனாலே தான்.

சகஸ்ர தளம்:

     நமது புருவ நடுவில், உட்புறம் சோதிப் பிரகாசம் உண்டானதும், இதன் வெளிச்சத்தினால், நம் மூளையின் மேல், நீர்ச் சக்தியுடன், மேடும் பள்ளமுமாக மூடிக்கொண்டிருக்கும் சவ்வானது, பஞ்சவர்ண நிறத்துடன், தாமரை இதழ்களைப் போன்று மலர்ந்து காட்சியளிக்கும், இதைத்தான் ஆயிரம் இதழ்க் கமலம், (சஹஸ்ர தள கமலம்) என்பார்கள்.

துவாத சாந்தம்:

     விந்துக் குண்டலியானது, புருவ நடுவில் உட்புறமிருந்து கிளம்பி, மூளையின்மேல் மெள்ளத் தவழ்ந்து, நெளிந்து, மெதுவாக மேலும் நகர்ந்து, தலை உச்சியின் நேர்கீழ்ப் பகுதியிலுள்ள மூளையின் நடுப்பகுதியை வந்தடையும்,  இந்த இடத்தையே பிரமரந்திரம், துவாதசாந்தம், ஓங்கார பீடம், ஸ்படிக மேடை எனப்பல பெயர்களால் குறிப்பிடுவார்கள்.


நாதக் குண்டலினி:


     மூலாதாரத்திலிருந்து கிளம்பிய நாதக்குண்டலியானது.  சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து, இந்திரயோனி என்னும் உள் நாக்கின் பின் புறம் உள்ள துவாரத்தின் வழியே, மூளையின் நடுப் பகுதியை வந்தடையும்.   ஏற்கனவே வந்த விந்துக் குண்டலினியைச் சிவமாகவும், நாத குண்டலினியைச் சக்தியாகவும் கொள்வார் இவ்விரண்டும் ஒன்றாகக் கூடிக் கலக்கும்.  இதைத்தான் சிவசக்தி ஐக்கிய பாவம் (பிந்து) என்பர்.


     இந்த இடம்தான் மதுரையால் குறிக்கப்படுவது.


     நமது கடவுள் உருவங்களுக்கு எல்லாம் வலது கைவிரல்கள் மேல் நோக்கியும், இடது கைவிரல்கள் கீழ் நோக்கியும் இருப்பதன் காரணம் என்ன? நம் விந்து மேலே சென்றால் பேரின்பம் என்பதையும், கீழே சென்றால் சிற்றின்பம் என்பதையும் நமக்குச் சூசகமாகக் குறிபிடுதற்காகத்தான்.


அனுபவ ஞான நிலை: 

   இதை மெய்த் தத்துவக் ஞான குருவால் தெரிந்து, தெளிந்து, அனுபவத்தால் உடலுக்குள்ளே உலாவும் உயிரையும், அந்த உயிரில் உணர்வாய் இருக்கும் இறைவனை அடையும் பொருட்டு, உந்தியின் கீழ் 2 அரை அங்குலத்திற்கு உட்புறம் இருக்கும் விந்துப் பையைச் சூடேற்றிக் கொதிக்க வைத்து, அது கொதித்தெழுந்த நீராவியின் ரசத்தால் முதுகுத் தண்டின் உட்புறம் உள்ள நாடியின் வழியே சென்று, பிடரியில் மோதி, அதில் சிதறும் சோம வட்டச் சுடரின் அருகில் சுழன்று, உச்சிப் பெருவழியில் வலம் வந்து, நெற்றியை நோக்கி ஊர்ந்து சென்று, அமிர்த தாரையைப் போல் நெற்றியின் நடுவில் ஒழுகி, புருவ நடுவைக் குடைந்து, ஏழு சவ்வுகளையும் விலக்கி, உள்ளே சென்று, பேரொளியைக் கண்டு, பேரறிவில் கலந்து மூளையின் வேலைகளை முடித்துக்கொண்டு, நடு மூளைக்குச் சென்று வலம்புரி சுற்றி, ரசத்தை மணியாக்கிக் காயத்தைக் கற்பம் செய்து, முகுளத்திற்கு சென்று, முக்திக்கு மூல இடத்தின் திருவுகோலைப் பற்றி எடுத்துக் கொண்டு திரும்பும்.


     அதே சமயம் மற்றோர் ஆவி, உந்தியின் கீழ் உட்புறமிருந்து சீறிச் சப்தத்துடன் உச்சிக்கு நேர் வழியாகக் கிளம்பி, உந்தியைக் கடந்து வயிற்றில் வலம் வந்து, இருதயத்தில் அமர்ந்து, அங்கிருக்கும் சப்தத்தையும் துணைக்கொண்டு, வெகு ஓசையோடு இரைச்சலுடன் கண்டத்தில் பொருந்தி, வீறிட்டுஓடி, அண்ணாக்கின் துவாரத்தின் வழியே மேலே கிளம்பி, மூளையின் நடுப்பாகத்தில் பரந்து செல்லும்.  அப்பொழுது முன் சென்ற ரசமணியும் வந்து சேரவும், ஆக இரண்டும் கலந்துவிடும்.  அங்கு ஊறும் அமுதப் பாலால் உடம்பு நனைந்து, சொர்ணதேகம் பெற்று, கடவுளை நம்மிடமே கண்டு நம்மில் சர்வமும் அடங்கி ஒடுங்கி நிறுத்தவே நாம் அதுவாகின்றோம்.

     இதுவே அனுபவ ஞான நிலை, இதுவே கடவுள் நிலையம் கூட.  ஏகமும், எல்லாமும் நிறைந்த பரம்பொருளில் இரண்டறக் கலந்து விடுவதே ஆனந்தம்.  இது திருவருட் செயலால் நடக்கக்கூடும்.  நடக்க நாமும் விரும்பவேண்டும். முயலவும் வேண்டும்.

     எல்லாம் இறைவன் செயல்! இறைவா என்று நாம் இருப்போம்!

********************************************************************************Friday, May 8, 2015

கிழவியும் குமரனும்

கிழவியும் குமரனும்     கிழவி என்பது முதிர்ந்து தளர்ந்த நிலையைக் காட்டுகின்றது.   குமரனென்பது இளமையைக் காட்டுகின்றது.  இந்த இரண்டும் ஒன்று படும்போது ஓர் இன்பம் விளைகின்றது.


     உலகிலேயே மாறுபட்ட இரண்டு பொருள்கள் ஒன்றுபடுகின்ற போது அழகும், இனிமையும், புதியதோர் அனுபவ இன்பமும் விளைகின்றது.


     வெப்பமும், தட்பமும் மாறுபட்டவை.  வெப்பமான நெருப்பும் தட்பமான நீரும் ஒன்றுபட்டு அதனால் உண்டாகிய நீராவியால் அநேக இயந்திரங்கள் இயங்குகின்றன.  இதனினின்றும் நாம் ஓர் பெரிய இரகசியத்தை அறியலாம்.


     "புனலுருவாய் அனலுருவில் திகழும் ஜோதி" என்று நம்மாழ்வாரும்

     "நீர் மேல் நெருப்பு" திருவருட்பிரகாச வள்ளலாரும்.

     "நீர் பூத்த நெருப்பு" என்று பெரியோர்களும் கூறுவதை சிந்திக்க இது நன்கு விளங்கும்.

     அதாவது நாம் உண்ட அன்னமானது பிராண நீராகின்றது.  நீரின் மேல் நெருப்பாக ஜோதியாக விளங்குகிறான் இறைவன்.  இறைவன் நம் உள்ளத்தில் நீர் மேல் நெருப்பாக இருந்து அதனினின்றும் ஏற்படும் ஆவியால் நம்மை இயக்குகின்றான்.

     "உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம்" என்று தாயுமானாரும்,

     "பூசனை யீசனார்க்குப் போற்றவிக்காட்டினோமே" என்று அப்பர் அடிகளும் கூறுவதால் நம் ஆவியை ஆண்டவனுக்கு அர்ப்பணித்தலே நைவேத்தியமும், பூசனையுமாகும் என்பது விளங்குகிறது.

     நாராயணன் என்னும் சொல், (நாரம் - தண்ணீர், அயனம் = பிறத்தல்) ஆதலால் நாராயணன் நீர் அம்சம் என்பது விளங்குகிறது.

     சிவன் என்னும் சொல், செம்மை என்ற சொல்லிலிருந்து தோன்றியது.  (செம்மை - செந்நிறம்) சிவனை, செஞ்சுடர் மேனியனே என்பதால், சிவன் நெருப்பு அம்சம் என்பது விளங்குகிறது.

   
     இதனை "நீர் மேல் நெருப்பும், நெருப்பின் மேல் உயிர்ப்பும்" என்று அருட்பெரும்ஜோதி அகவலில் இராமலிங்க அடிகள் கூறுகிறார்கள்.


     "நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்த நித்தம் நீரிலே 
     விருப்ப மோடு நீர்கு ளிக்கும் வேதவாக்யங் கேளுமின் 
     நெருப்பும் நீரும் உம்முளே நினைந்து கூற வல்லிரேல் 
     சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே,

                                --- என்று சிவவாக்கியர் கூறுவதாலும் இதை நன்கு உணரலாம்.


     மேற்கண்ட ஞானக்கருத்து விளக்கங்களைத் தற்கால விஞ்ஞானத்தால் அறியலாம்.

     அதாவது மின்சார வெப்பநிலை (Therma Electrical) என்னும் சிறிய தத்துவத்தில் உள்ளது.

     இருதரப்பட்ட இரண்டு உலோகங்களோ அல்லது கலவை உலோகங்களோ ஒன்றாக இணைக்கப்பட்டு அதை ஏதாவது ஒரு நுனியை அனலில் தோய்த்தால் அது தானாகவே அடுத்த நுனியில் ஒரு இயக்கும் சக்தியை உண்டு பண்ண ஆரம்பித்து விடுகின்றது.  அனலில் தொடரப்படும் நுனிக்கு சுடு சந்திப்பு (Hot Junction) என்றும், வெளியில் இருக்கும் நுனிக்கு குளிர்ந்த சந்திப்பு என்றும் சொல்லப்படுகின்றது. குளிர்ந்த சந்திப்பு (Cold Junction) நுனிகள் இரண்டும் ஒரு மின் அளக்கும் கலத்தின் மூலம் இணைக்கப்பட்டால் அது இந்த நெருப்பின் மேல் இருக்கும், நெருப்பு அல்லாதநுனியில் இயக்கும் சக்தி பெற்றதை எடுத்துக் காட்டுகிறது.  இதிலிருந்து நெருப்பு அம்சம் இல்லாது நீரம்சமும் இல்லை.  நீராம்சம் இல்லாது நெருப்பு அம்சமும் இல்லை என்கிற தத்துவம் விளக்கப்படுகிறது.


வளையலும் காப்பும்:     இந்த தத்துவம் விஞ்ஞான மூலம் மக்கள் உணராத முற்காலத்திலேயே, குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் சுலபமான முறையில் இந்த உபகரணத்தைக் கொண்ட "சூல்காப்பு" என்ற பெயரில் அணிவிப்பத்தின் மூலம் அனுகூலங்களைப் பெற்று வந்திருக்கிறார்கள்.  ஆனால் விளக்கம் தெரியாது சம்பிரதாயத்தின் பேரில் அதை அவசியம் அணிந்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனையின் மூலம் அணிவித்து அனுகூலம் அடைந்து வந்திருக்கிறார்கள்.


     அதாவது சூல்காப்பில் ஒன்று செப்புக்கம்பி, மற்றொன்று இரும்புக்கம்பி, இந்த இரண்டு கம்பியையும் சேர்ந்து முருக்கப்பட்டு, கர்ப்பிணியின் கையில் வளையலாகவும், சிறு குழந்தைகளுக்குக் காலில் காப்பாகவும் அணிவிப்பதே இதன் தத்துவ சுருக்கம் ஆகும்.

     வளையலும், காப்பும், கையிலும், காலிலும் அணிந்து அசைவதன் மூலம் அதிலிருந்து உண்டாகும் மின் சக்தி உடலில் உள்ள வெட்ப தட்ப, தாரதம்யங்களை எப்பொழுதுமே சமநிலையில் இருக்கச் செய்கிறது.  ஆதலால் நெருப்பில்லாமல் நீரில்லை, நீரில்லாமல் நெருப்பு மில்லை, இவ்விரண்டும் ஒன்று சேராமல், இயக்கவல்ல ஆவியும் இல்லை என்பது விளக்கப்படுகின்றது.


ஔவையார் கிழவியும் குமரன் முருகனும்:


     இங்கே கிழவி என்பது, நமது ஊன்உடல் கிழத்தன்மை அடைவதைக் காட்டும்,

     குமரன் என்பது, ஊன்உடலை இயக்கும் அணுவில் அமைந்திருக்கும் ஜோதியைக் காட்டும்.

     இதனை இராமலிங்க அடிகள், "அணுவுள்ளமைந்த பேர் ஒளியே அன்புருவாய் பரசிவமே" என்றார்கள்.

     ஊன் உடலுக்கு மூப்பு, தளர்ச்சி, கிழத்தன்மை எல்லாம் உண்டு.  ஆனால் அதன் உள்ளிருந்து இயக்கும் ஆத்ம ஜோதிக்கு கிடையாது.  அது என்றும் இளமையாக இருப்பதால் பாலகனென்றார்கள்.  தளர்ச்சியும், கிழத்தன்மையும் அடையக்கூடிய தேகாபிமானத்தை, என்றும் இளமையோடு இருக்கும் பாலகனாகிய ஆத்ம சொருபமாகிய ஜோதியினிடத்தில் ஒன்றுபடுத்த பேரின்பம் விளைக்கின்றது.  இதுவே சச்சிதானந்த சொரூபம்.  இதைக் குருமுகத்தில் அறிக.


     ஔவை என்றால் தாய் என்று பொருள்படும்.  இறைவன் தாயும் ஆனவன் அல்லவா, ஆகையால் ஆன்மசிற்சக்தியே முதிர்ந்த அறிவைப் பெறுவதால், மிக்க முதுமையுடைய ஔவையார் எனப்பட்டது.


     பாலகன் ஆ மேய்க்கும் சிறுவன் (ஆ - பசு - ஜீவன்) ஜீவான்மாவை மேய்க்கும், ஆத்ம ஜோதியை என்றும் பாலகனாகிய சிறுவன்.


சுட்டபழம் சுடாதபழம்:

     ஔவையார் நடந்தே நானிலம் முழுவதும் சுற்றித் தமிழ் பரப்பி வந்தனர்.  ஒரு சமயம் கோடையின் வெப்பம் மிகுதியைத் தாங்காது,  ஒரு தாமரைத் தடாகத்தில் கைகால்களைச் சுத்தி செய்து, சற்று தண்ணீர் பருகினார்.  குளிர்ந்த காற்று வீசும் தடாகத்தின் கரையில் உள்ள ஒரு நாவல் மரத்தின் நிழலில் தங்கினார்.  அம்மையார் பசி மிகுதியால் ஆயாசமாய் இருந்தனர்.  மேலே அண்ணாந்து பார்த்தார்.  மரத்தின் மீது ஒரு சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டார்.


     ஔவையார் அப்பாலகனைப் பார்த்து சிறுவனே நீ யார் என்று வினவினார்கள்.  அப்பாலகன் பாட்டி என்னையா கேட்கின்றாய், எனக்கு ஒரு பெயரா? இரு பெயரா? அவரவர்கள் விருப்பம் போல் பெயர் இட்டுக் கூப்பிடுவார்கள்.  பித்தரென்றும் அழைப்பார்கள்.  மேலும் எல்லா உயிரின் பெயரும் எம்பெயரே என்று சொன்னான்.  

     திருவருட்பிரகாச வள்ளலார் கூறும் பாடலைச் சிந்திக்க இது நன்கு விளங்கும்.


     "சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச்
     சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் 
     பிற்சமயத் தார்பெயரும் அவர் பெயரே கண்டாய் 
     பித்தர்என்றே பெயர் படைத்தார்க் கெப்பெயர் ஒவ்வாதோ 
     அச்சமயத் தேவர் மட்டோநின்பெயர் என்பெயரும் 
     அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும் அவர்பெயரே 
     சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் 
     திருக்கூத்துக் கண்டளவே தெளியும் இது தோழி."

   
     இதைக் கேட்ட ஔவையார் "பாலகனாய் உள்ள நீயா இவ்வளவு பெருமையுடைவனாய் விட்டாய், என நினைத்து எனக்கு மிகவும் ஆயாசமாக இருக்கிற படியால், நாவற்பழம் பறித்துப் போடு" என்று கேட்டாள்.  அதற்கு அந்தப் பையன் ஓ கிழவியே, உனக்குச் சுடுகிற பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? சொல் என்று கேட்டான்.

   
     எல்லாம் தெரிந்த கிழவிக்கு அதுவிளங்கவில்லை, நாவற்பழத்திற் சுடுகிற பழமுமிருக்குமா என்று ஆலோசித்து ஒன்றுந் தோன்றவில்லை.  பனம்பழம் தான் சுட்டுத் தின்பார்கள், நாவல் பழத்தைச் சுடுவது என்பது இதுவரையிலும் நான் கேள்விப்பட்ட தில்லையே, இப்பாலகனிடம் அது என்ன என்று கேட்பதும் கூடாது என்று இறுமாப்புடன் "சுடுகின்ற பழம் எனக்கு வேண்டுவதில்லை." சுடாத பழமே வேண்டும் என்று கேட்டாள்.

     சிறுவன் புன்சிரிப்பாகச் சிரித்துக் கொண்டே மரக்கிளைகளைக் கையால் பிடித்துக் குலுக்கி விட்டான்.  அதிலிருந்து கனிந்த பழங்களும், கனியாத பழங்களும் கீழேயுதிர்ந்தன.  அப்போது ஔவையார் கனிந்த பழத்தைப் பார்த்து எடுத்து, அதனில் தலைப்பாயிலிருந்த மணல் ஒட்டிக் கொண்டிருந்தமையால், அதை வாயினால் ஊதினார்கள்.  ஓ பாட்டி, சுடாத பழங்கேட்ட நீ இப்போது சுடுகிற பழத்தைத் தின்னப்போகின்றாயே, வாய் வெந்து விடப் போகிறது.

      ஐயோ பாவம் நன்றாக ஊதி, ஊதி, ஆறின பின்னர் சாப்பிடு என்றான்.  ஔவையார் அப்போது சுடாத பழம் காய் என்று தெரிந்து கொண்டு இக்கருத்து நமக்குத் தெரியாமற் போயிற்றே என்று வெட்கித் தலை குனிந்து நின்றாள்.


     எடுத்த பழம் கையிலேயே நின்று விட்டது, பசி தாகம் பறந்து போயிற்று.  அச்சமும், நாணமும் கொண்டு மானம் வந்து உள்ளத்தை வருத்தின.   எல்லாப் புலவர்களையும் ஒரு கணத்தில் வென்று வெற்றி பெற்று, வீறு கொண்ட நான், ஆ(டு) மேய்க்கும் இப்பாலகனிடம் தொற்றேனே.  ஆ! ஆ!! அறிவு எங்கு போய் மறைந்திருக்கின்றது.


"கருங்காலிக் கட்டைக்கு நாணாக்கோ டாலி 
இருங்கதலித் தண்டுக்கு நாணும் பெருங்கானில்
காரெருமை மேய்கின்ற காளைக்கு நான் தோற்ற 
தீரிரவு துஞ்சாதென் கண்."

     இவ்வெண்பாவைக் கேட்டவுடனே அக்குமரன், ஔவையார் பால் அருள் மிகுந்து, மரத்தை விட்டு இறங்கி, அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு நான் உம்முடன் விளையாட வந்ததேயின்றி இகழ் வதற்கன்று, உம்மைப் போல் குற்றத்தை உணர்ந்தவர்கள் யாரிருக்கிறார்கள் இவ்வுலகத்திலே? ஆகையால் எம் அருள் பெற்ற நீ உலக மக்களுக்கு நீதியையும் ஞானத்தையும் எடுத்துப் போதித்திரு என்று ஆசி கூறினார். 

     ஆ உருவத்தைக் கண்டல்லவா! சிறுவன் என்று மதி மயங்கி இறுமாப்புற்று இருந்தோம் என்பதனை ஔவையார் நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து கண்ணீர் விட்டு .... 

"பெரியோர் எல்லாம் பெரியரு  மல்லர் 
சிறியோர் எல்லாம் சிறியருமல்லர்"  - ஔவையார் 

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து" - திருக்குறளும் 

"இருநிலத்தே பசித்தவர்க்கு பசிநீக்க வல்லார் 
இவர் சிறியர் இவர் பெரியார் என்னல் வழக்க லாவே

------  என்று வள்ளலாரும் கூறியுள்ளதைச் சிந்திக்க இது விளங்கும். 

     ஔவையாரும், இனி எவ்வாற்றானும் கல்வியில் செருக்கடைய மாட்டேன் என்று கூறி, தனக்கு உண்மையைக் கூற வந்த கருணைக் கடலே, அருட்பெருஞ்ஜோதியே ஆராவமுதே, உன்பால் நான் தோற்றது எனக்குப் பெருமையே என்று துதித்து, அச்சிறுவன் பாதத்தில் விழுந்து வணங்கினாள்.  முற்றறிவு பெற்றிருந்த அச்சிறுவன் ஔவையாரைத் தேற்றி, கல்வியின் பயன் செருக்கடைவதற்க்கல்ல இறைவன் திருவடியை அறிந்து தொழுவதற்கேயாகும் என்றனன். 

"கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழா அர் எனின்."

           ----     திருவள்ளுவர் கூறியுள்ளதைச் சிந்திக்க நன்கு விளங்கும். 

Tuesday, May 5, 2015

கண்களின் சக்திகள் (Part - 3)

சூரிய சந்திர கலைகள்:      நாம் இழுத்து விடும் சுவாசங்கள் அத்தனையும், நம் புருவ நடுவில் உட்புறம் மோதித்தான் போகும்.  மோதித்தான் வரும்.  நாசியில் வலதுபுறம் போகும் சுவாசம், வலது கண்ணின் நாடியான சூரிய நாடியை உரசிக் கொண்டு போகும், வரும்.  சுவாசமும் உரசிக் கொண்டு வரும்.  இதைச் சூரிய கலை என்பர்.

     இதேபோல் நாசியில் இடதுபுறம் போகும் சுவாசம், இடது கண்ணின் நாடியான சந்திர நாடியை உரசிக் கொண்டு போகும். உரசிக் கொண்டு வரும்.  இதைச் சந்திர கலை என்பர்.  சில சமயம் இரண்டு சுவாசங்களும் ஒன்றாகச் சேர்ந்து, அக்கினி நாடியை உரசிக் கொண்டு போகும், உரசிக் கொண்டு வரும்.  இதைச் சூன்ய நிலை என்று கூறுவார்கள்.

     ஞான நிலையில்  சூரிய  சந்திர கலைகள் வேறு.

அக்கினி ஜுவாலை:

     ஒரு சிலர் எண்ணத்தைப் புருவ நடுவில் உட்புறம் நினைவில் வைத்து, மூக்கின் துவாரங்கள் இரண்டில் தம் கை விரல்களால் இடதுபுறம் உள்ள துவாரத்தை அடைத்து, வலதுபுறம் உள்ள துவாரத்தில் மூச்சு விடவும் வாங்கவும் பழகுவார்கள்.

     மறுபடியும் வலதுபுறம் உள்ள துவாரத்தை அடைத்து இடதுபுறம் உள்ள துவாரத்தில் மூச்சு விடவும் வாங்கவும் பழகுவார்கள் சிலகாலப் பயிற்சிக்கு விரல்கள் இல்லாமலேயே சுவாசங்களை மாற்றும் திறமை வந்துவிடும்.  மறுபடியும் வலதுபுறம் உள்ள துவாரத்தை அடைத்து இடதுபுறம் உள்ள துவாரத்தில் சிலகாலப் பயிற்சிக்கு, விரல்கள் இல்லாமலேயே சுவாசங்களை மாற்றும் திறமை வந்துவிடும்.

     சூரிய கலை, சந்திர கலை என்ற இரண்டு சுவாசங்களும் இவர்கள் நினைத்த மாதிரி அப்போது நடக்கும்.  இதைப் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு சுவாசங்களையும் ஒன்று சேர்த்துப் புருவ நடுவில் உட்புறம் உள்ள அக்கினி நாடி என்னும் சூன்ய நிலையில் நிறுத்திப் பழகுவார்கள்.  அப்பொழுது, அந்த இடத்தில் உணர்வுகள் உண்டாகி, அக்கினி ஜுவாலை அடிக்கும்.  இதை ஜோதி என்று எண்ணிக் கொண்டு பலகாலம் பயிற்சி செய்வார்கள்.  இவர்கள் ஜோதியைப் பார்க்க முடியாது.  அனால் நல்லவர்களாக வாழ்வார்கள்.

தீப தரிசனம்: 

     சிலர் தீப தரிசனம் என்று சொல்லி, தம் கண்களை இமைக்காமல், விளக்கின் ஒளியைக் கூர்ந்து பார்த்துப் பார்த்துப் பழகுவார்கள்.  வேறு சிலர் வானத்து நட்சத்திரங்களில், குறிப்பிட்ட நட்சத்திரம் ஒன்றைத் தம் கண்களை இமைக்காமல் கூர்ந்து பார்த்துப் பழகுவார்கள்.

     ஒரு சிலர் சுவரில் ஒரு கறுப்புப் புள்ளியை வைத்து, தூர நின்று கொண்டு தம் கண்களை இமைக்காமல் கூர்ந்துப் பார்த்துப் பழகுவார்கள்.  இப்படி இவர்கள் பலகாலம் பழகிய பிறகு இவர்களின் கண்களில் காந்த சக்தி பெருகும்.  கண்களும் பலப்படும், மனமுத் திடப்படும்.

     இந்தப் பயிற்சி உடையவர்கள் பிறரிடம் பேசும் பொழுது, அவர்களுடையை நெற்றி நடுவான புருவ மத்தியத்தைக் கூர்ந்து பார்த்துப் பேசினால், நன்மை விளையும். புருவத்தைக் கூர்ந்துப் பேசினால் தீமை விளையும், கண்களைக் கூர்ந்து பார்த்துப் பேசினால், இவர்களுடைய கண்களில் உள்ள காந்த சக்தியின் ஒளிக்கதிர்கள், அவர்களுடைய கண்களில் ஊடுருவிச் சென்று, அவர்கள் மனதைக் கவர்ந்து ஈர்த்துக்கொள்ளும்.  அப்பொழுது அவர்கள், இவர்களுடைய சொற்படி நடப்பார்கள்.  இதைப் பயன்படுத்தி கொண்டு, இவர்கள் தாம் நினைத்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள்.  இதற்கும் ஞான நிலைக்கும் சம்பந்தமில்லை.

முப்பால் எது?

     ஞான நிலைக்குக் கண்களுடைய ஒளி முக்கியமானது.  கண்களுடைய ஒளி நாடிகளான, சூரிய ஒளி நாடியும், சந்திர ஒளி நாடியும், இவை இரண்டும் கூடும் இடமான புருவ நடுவின் உட்புறமும், ஞான அனுபவ முயற்சியால் அக்கினி சுவாலையாகப் புறப்பட்டு வந்த விந்துக் குண்டலினி சக்தி, இந்த இடத்தை அடைந்ததும், இதன் உஷ்ணத்தால், சூரிய ஒளி நாடி, சந்திர ஒளி நாடி, அக்கினி ஒளி நாடி மூன்றும் முச்சுடராய்ச் சுடர் விட்டு ஒளியாகப் பிரகாசிக்கும்.  இதுதான் ஜோதி தரிசனம்.  இந்த  இடத்தை முப்பால் என்றும் சொல்வ துண்டு.


     இதன் பிறகு கண்களுடைய ஒளி நாடிகளின் உதவியால் உள்ள நோக்கு உண்டாகும்.  இதற்கு அகப்பார்வை என்று பெயர்.  இந்தச் சுடர் ஒளிகளின் துணை கொண்டு முப்பாலுக்கு அப்பாலாய், அப்பாலுக்கும் அப்பாலாய் வீற்றிருக்கும் இறைவனை அடைய வேண்டும்.  இதற்காகத் தான் அம்பாள் கோயில்கள் உள்பட எல்லாக் கோயில்களிலும், மூலஸ்தானத்திற்கு முன்னால் ஒரு வாசற்படியும், அதற்கும் முன்னால் ஒரு வாசற்படியும், இந்த வாசற்படிக்கு முன்னால் இருபக்கமும் இரண்டு சிலைகள், கதையுடன் ஒருகாலால் நின்று கொண்டு, மறுகாலைத் தூக்கிக் கொண்டு காவல் நிற்பது, இதுதான் நமது கண்கள் ஒரு கால் தூக்கிக் கொண்டிருப்பது வெளிப்பார்வை, ஒரு காலால் நிற்பது உள்பார்வை.  இந்த சிலையைக் கடந்தால் ஒரு வாசற்படி, அதைக் கடந்தால் இன்னொரு வாசற்படி, அதையும் கடந்தால் தெய்வச் சிலை இதைத் தரிசித்து வணங்க வேண்டும்.  அங்கு தூங்கா விளக்கு எரிந்து கொண்டிருக்கும்.  இது உயிர், ஆன்மா, சிற்சபை, அறிவு, பத்தி, சிரசு, சன்னதி!

கண்களே நம்மை இறைவனிடம் இழுத்துச் செல்லும் காந்தச் சக்தி என்பது இதிலிருந்து தெரிகிறது. 

கண்களின் சக்திகள் நிறைவு பெற்றது.... மீண்டும் ஒரு தலைப்பில் சி(ச)ந்திப்போம். 

கண்களின் சக்திகள் (Part - 2)

சாயா தரிசனம்:     சிலர் சூரிய வெளிச்சத்திலும் சந்திர வெளிச்சத்திலும் தன் நிழலைக் கூர்ந்து பார்த்து விட்டு பார்த்துவிட்டு உடனே மேலே ஆகாயத்தைப் பார்த்தால், ஆகாயத்தில் உயரமாக வெள்ளை நிறத்துடன் தன் உருவம் தோன்றும்.  நெடுங்காலம் பழகிய பிறகு அது பேசும் அதைக் கொண்டு சில வேலைகளை செய்வார்கள்.  இதன் பெயர் சாயா தரிசனம்.


     இதைப்போல, பெரிய நிலைக்கண்ணாடி முன் உட்கார்ந்து கொண்டு, தன் உருவத்தை உற்றுப் பார்ப்பார்கள்.  கொஞ்ச காலத்திற்குப் பிறகு, தன் உருவம் மறைந்து, அவர் நினைக்கும் உருவங்கள் அதில் தோன்றும்.  அதைக்கொண்டு சில வேலைகள் செய்வார்கள்.  இதுவும் சாயா தரிசனமே.  இவைகள் அனைத்துமே கண்கள் மூலம் செய்யும் மாயா ஜாலங்களேயாகும்.


காலைச் சூரியனைப் பார்த்தால்:     சிலர் காலையில் உதயமாகும் சூரியனைக் கூர்ந்து பார்த்துத் தியானங்கள் செய்வார்கள்.  அப்பொழுது சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கண்களுக்குள்ளே ஊடுருவிச் செல்லும்.  இதனால் கண்கள் பலப்படும்.

     அன்றாடம் சூரிய நமஸ்காரம் செய்தால் உடலுக்கும் நல்லது.  சிலர் கண்களை வலம் புரி சுற்றுவார்கள்.   அதனால் கண்ணின் உள்ளேயிருக்கும் பாப்பா குளிர்சியடைந்து, கண்கள் நன்றாகத் தெரியும்.  கருணைப் பார்வை உண்டாகும்.  சிலர் கண்களுக்கு உள்ளே இருக்கும் பாப்பாவில் நினைவை நிறுத்தி, இது தான் ஞான நிலை என்று, அதே எண்ணத்தில் பழகி வருவார்கள்.  இதிலிருந்து மேலான நிலையான ஞான நிலைக்குச் செல்ல வேண்டும்.

ஜோதி தரிசனமா: 

     சிலருக்கு விஷயம் புரியாமல், கண்களை மூடிக்கொண்டு, விரல்களால் கண்களின் கடைப்பக்கதை அழுத்துவார்கள்.   அப்பொழுது கண்களின் மறு பக்கம் வட்ட வடிவமாக ஓர் ஒளிப்பிரகாசம் தொன்றும்.  இது கருவிழியின் பிரதி பிம்பம்.  இதை அறியாமல், சோம வட்டச் சுடரைப் பார்ப்பதாக எண்ணி, அன்றாடம் பல தடவை அழுத்திக் கண்களைக் கெடுத்துக் கொள்வார்கள்.

     வேறு சிலர், பெருவிரல்களால் இருகண்களையும் இறுக்கி அழுத்தி, ஆள் காட்டி விரல்களால் இரு காதுகளையும் அடைத்து, நடுவிரல்களால் நெற்றியின் நடுப்பாக நரம்புகளை அமுக்கி, மோதிர விரல்களால் மூக்கினி இரு துவாரத்தையும் அடைத்து, சுண்டு விரல்களால் வாயை அமுக்கிப் பொத்திக் கொஞ்ச நேரம் இருந்தால், கண்களுக்குள்ளே குபீரென்று ஜோதி தோன்றும், தினந்தோறும் ஜோதியைப் பார்பதாக எண்ணி இதைப் பலதடவை செய்வார்கள்.  இதனால் இவர்களுக்கு ஆபத்துக்கள் நேரும்.  சிலருக்கு சாதாரணமாகக் கண் பார்வை மங்கும்பொழுது,  விளக்கின் தீபம் போலக் கண் ஓரங்களில் போய் வந்து கொண்டிருக்கும்.  இது கண்களுடைய நரம்புத் தளர்ச்சியால் ஏற்படக்கூடியது.  இது தெரியாமல் தான் ஜோதிப் பிரவாகத்தை அடிக்கடி காண்கிறேன் என்று சொல்லுவார்கள்.

நடுவீட்டு விளக்கு:     உண்மையில் கண்கள் ஏகாக்கிரக சக்தியை வாங்கக் கூடியவைதான்.  ஞான ஒளியைக் காணவும், இறைவனை அடையவும் கண்களே மூல காரணம்.  அதாவது விறகுகளை அடுக்கி, அதில் சிறு நெருப்பை வைத்தால், அது கொழுந்துவிட்டு எரியும்.  அதுபோலவே, வீட்டிற்க்குள் நடுவீடு என்று ஒன்று உண்டு.

     அங்கு விளக்கு ஏற்றி வணங்கி, தெய்வத்தை வழிபடுவார்கள்.  அதுபோலவே நம் உடலுக்கு நடுவீடு, நெற்றி நடுவான புருவ மத்தியம், அங்கு ஒளியேற்றி இறைவனை அடையவேண்டும்.  நம் புருவ நடுவில் அக்கினி, சூரியன், சந்திரன் என்னும் மூன்று ஒளிநாடிகள் இருக்கின்றன.  அதில் அக்கினி நாடி உடலுக்கு எப்பொழுதும் உஷ்ணத்தைக் கொடுத்த வண்ணம் இருக்கும்.  அதனால்தான் ஜுரமோ, தலைவலியோ வந்தால் நெற்றியில் மருந்து போட்டால் உஷ்ணம் தணியும்.  மற்ற இரண்டு ஒளி நாடிகளில் ஒன்று சூரிய நாடி இது வலது கண்ணின் நாடி, மற்றொன்று சந்திர நாடி, இது இடது இடது கண்ணின் நாடி,  இந்த இரண்டு நாடி ஒளிகளும் கண்களிலிருந்து வெளி உலகத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும்.

கண்ணாடி பார்ப்பது எது?      நம் கண்களின் நாடிகள் இரண்டும் புருவ நடுவில் கூடும் இடத்தைக் கண்ணாடி என்றும், இந்த கண்ணாடியான புருவ நடு இடத்தை, எண்ணத்தின் நினைவால், உற்றுகூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, சகல விசயங்களும் புரியும் என்று கூறுவர்.  இதைத் தெரியாத சிலர், இறைவனை அடைய நிலைக் கண்ணாடியை உற்றுக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

........   Part - 3 தொடரும்.கண்களின் சக்திகள் (Part - 1)

கண்களின் சக்திகள்:     அன்பர்களுக்கு வணக்கம் இந்த article எழுதும் நோக்கம் சில அன்பர்கள் "கண்கள்" தான் "கண்மணி" தான் மெய்ப்பொருள் என்று தெரிந்தும் எப்படியெல்லாம் பயிற்சிகளை செய்து கொண்டு வருகிறார்கள் என்று மக்களுக்கு தெரிய படுத்தவும் தெளிய படுத்தவும் தான் எனது நோக்கம் கண்களில் உள்ள அபரிதமான சக்திகளை இரகசியம் என்று மறைத்து வைத்து இருந்ததை மக்களுக்கு இரகசியம் ஏதுமின்றி தெரிய படுத்தவே எனது நோக்கம் .   அதை விடுத்தது மற்றவர்களை குறை சொல்லும் நோக்கம் அல்லவே. 


     நமது கண்களே எல்லாவற்றிற்கும் பிரதானம்.  பிறந்தது முதல் இறக்கும் வரையில் கண்களை வைத்துத்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றோம்.


     கண்களில் காந்த சக்தியும், ஈர்ப்பு சக்தியும் உண்டு.  கண்கள் கிரகிக்கும் சக்தியை மனதில் பதிய வைத்துவிடும்.  நாம் எதை நினைத்தாலும், அந்த உருவமும், பொருளும், கண்களால் காணும் கற்பனையே, இதை மனது சித்தரித்துக் காட்டும்.  அறிவு அதை ஆராய்ச்சி செய்யும்.


    நமது கண்களுக்கு, உலகத்துக்கு அப்பால் சந்திர சூரிய மண்டலங்களையும் கடந்து, நட்சத்திர மண்டலங்கள் வரையில் தெரியும்.

     மனித வளர்ச்சி, விஞ்ஞானம், ஓவியம், காவியம், கற்பனை, இன்னும் எத்தனையோ, அத்தனைக்கும் கண்களே முக்கிய காரணம்.  நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாச் சம்பவங்களுக்கும் கண்களே காரணம்.


     ஜாடை, செய்கை, அன்பு, ஆத்திரம், ஆசை, அதிகாரம், அதிர்ச்சி, ஆணவம், கோபம், கருணை, வேதனை, பெருமை, பொறாமை, வஞ்சகம், காதல், காமம் இன்னும் எத்தனையோ, அத்தனையும் கண்களின் பார்வையினாலேயே முடிந்து விடும்.  இவை யாவையும், இன்னும் சில குற்றம் குறைகளையும் கண்களே காட்டிக் கொடுத்துவிடும்.  இறைவனை அடைவதர்க்குக் துணையிருந்தும் செயல்படும்.


     கண்களைப் போன்ற மாபெரும் சக்தி வேறு எதுவுமே கிடையாது.  இதனால் தான் குழந்தைகளையும், தெய்வங்களையும், அன்பு உடையவர்களையும், கண்ணே, கண்ணின் மணியே என்று புகழ்கின்றார்கள் மனக்கண், அறிவுக்கண், ஞானக்கண் என்று கண்களை உவமானப்படுத்திக் கொள்கின்றார்கள்.  சில காரியங்களையும், பொருள்களையும், நாய், பூனை, மாடு போன்ற சில ஜீவராசிகளையும் கண்களைப் போல் கருதிப் பாவிக்கின்றார்கள்.


ஜீவன்களிடம் கண் பார்வை சக்தி:      மீன்கள் தண்ணீரில் முட்டையிட்டுச் சில நாட்களுக்குப் பிறகு தம் முட்டைகளைக் கண்களால் கூர்ந்து பார்க்கும்.  உடனே அது குஞ்சு பொரித்து விடும்.

     நல்ல பாம்புக்கு அதிகப் பசி எடுக்கும் பொழுது, மரத்தின் மேல் உள்ள பறவையை, தன் கண்களால் உற்று நோக்கும்.  அந்தப் பறவை மயங்கிக் கீழே விழும்.  உடனே பாம்பு அதை விழுங்கி விடும்.

     இதுபோல் மலைப்பாம்பும், சிறு மிருகங்களைப் பார்த்ததும், தன் கண்களால் உற்று நோக்கும்.  உடனே அந்தச் சிறு மிருகங்கள் தாமே வந்து, மலைப்பாம்பின் வாயில் சிக்கிக் கொள்ளும்.

     பல்லி, தவளை, மீன், முதலை இவைகளுக்கும் இத்தகைய கண்பார்வை உண்டு.

     ஆகாயத்தில் வெகு தூரம் பறக்கும் கருடன், கழுகு போன்ற பறவைகளுக்குப் பூமியில் உள்ள சிறு பொருளும் கண்களுக்கு நன்றாகத் தெரியும்.

     பச்சோந்தி மயிலைப் பார்த்து விட்டால், தன கண்களால் மயிலை உற்று நோக்கும்.  அப்பொழுது மயில் தானே  வந்து, பச்சோந்தியிடம் கழுத்தை நீட்டும்.  உடனே பச்சோந்தி மயிலின் கழுத்தைக் கடித்துத் துண்டித்து அதன் இரத்தத்தைக் குடிக்கும்.


கண் திருஷ்டி வேகம்: 
     இத்தகைய காந்தப் பார்வை சில மனிதர்களுக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது.  அவர்கள் நம்மைப் பார்த்தால், ஒன்றும் பேசாமல் அடங்கி விடுகின்றோம்.  ஒரு சிலர் கண்களைப் பார்க்கும் பொழுது, நம்மையும் அறியாமல், பக்தி, விசுவாசம், அன்பு ஏற்படுகின்றன.  சிலர் நம்மைப் பார்க்கும் பார்வையில் மயங்கி விடுகின்றோம்.  சிலர் கண் பார்வைப்பட்டாலே அவதிக்குள்ளாகின்றோம்.  இதைக் கண் திருஷ்டி என்பார்கள்.  இவர்கள் பிறக்கும் பொழுது இவர்களின் கண்களில் இரத்தத் துளிகள் பட்டு, அதில் கண் விழித்தவர்கள் என்பார்கள்.

மாந்திரீகமும் கண்ணும்:

     சிலர் கண்களால் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் போன்ற மனோவசியமும், கண்கட்டி வித்தைகளும் செய்வார்கள்.  சூன்யம் என்னும் மாந்திரீகமும் கண்களால் செய்யக் கூடியதே.

     கண்களின் சக்திகளை மேலும் அறிய Part - 2 வில் பாப்போம்.


Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...