Tuesday, October 20, 2015

மகாபாரதம் - ஞானியின் கருத்து

மகாபாரதம்:
---------------------
1. குந்தி தேவி சூரியனை  தோத்திரம் செய்து கர்ணனை பெற்றாள்

2. குந்தி தேவியும், மாத்திரியும் தேவர்களை தோத்திரம் செய்து ஐந்து பிள்ளைகளை பெற்றனர்

3. திரெளபதிக்கு ஐவரும்  புருசர்கள் ஆனார்கள்.

4. கௌரவர்கள் நூறு பேர்.  அவர்கள் பிறந்த விதம்.

இவைகள் உலகியல் அறிவுக்கு பொருந்துமா?  என்று  கேட்டுக் கொள்கிறேன்.

     மாகாபாரதம் ஊர் உண்மை ஞான பொருளின் தத்துவ கதையாகும்.  உண்மையாக நடந்தது அல்ல என்பது ஞானிகளின் கருத்தாகும்.

பஞ்ச பாண்டவர்கள்:
➖➖➖➖➖➖➖➖
தருமா  சிந்தனை உள்ளவர்கள் ஐம்பூதத்தால் ஆன மனித தேகத்தின் கண் உள்ள ஐம்புலன்கள் ஞானேந்திரியங்கள் ஆன்ம உணர்வுள்ளவர்கள் பஞ்ச பாண்டவர்களாகும்.

திரெளபதி
➖➖➖➖
மனித தேகத்தை காக்கும் இரத்தமாகிய சக்தி, பெண் அம்சம் (குங்குமம்) என்பதாகும்.  இச்சக்தியைக் கொண்டு ஐம்புலன்கள் செயல்படுவதால் ஐவருக்கு பத்தினி என்ற தத்துவ கருத்தாகும்.

கண்ணன்:
➖➖➖➖
ஆன்ம அறிவு மாயன், தேர் ஓட்டி, பாண்டவர்களின் மைத்துனன், உலக உயிர்களாகிய தேர்களை வழி நடத்துபவன் என்ற தத்துவமாகும்.

துரியோதனன்:
➖➖➖➖➖
நான், எனது என்ற அகங்கார மமகாரங்களின் உருவம், அஞ்ஞானத்திற்கு அதிபதி.  அறிவுக்கும், நீதிக்கும் ஊசிமுனையிடமும் கொடுக்க மறுத்தவன்.

சகுனி:
➖➖➖
கெளரவர்களின் மைத்துனன், தீவினைகளுக்கு வழிகாட்டும் வஞ்சக அமைச்சர்.

கருத்து நம் மானிட தேகத்தின்கண் அறிவுக்கும், அறியாமைக்கும், தர்மத்திற்கும், அதர்மத்திற்கும், நீதிக்கும், அநீதிக்கும், புண்ணியம், பாவம் என்ற எண்ணங்களாகிய இருவினை போர் வீர்களுக்கு இடையில் நாள் தோறும் நடக்கும் மனப்போராட்டமே பாரத போராகும்.  இப்போர் மானிடன் என்ற ஒருவன் இருக்கும் வரை மனதிற்கும் அறிவிற்கும் ஓயாது நடக்கின்ற போராகும்.

சற்சங்க பலமே சாதனா பலம்

சற்சங்க பலத்தால்  =   சுருதி, யுக்தி, உண்டாகும் 
அனுபவத்தால்         =    விவேகமுண்டாகும். 
பயன்                            =  சூடாமணி பிரகாசிக்கும் 

     தன் சீவன் மீது காருண்யம் காட்டுவாயானால் அதுவே எல்லா உயிர்களையும் இன்புற்று இருக்க செய்யும். 

     வள்ளலார் மற்றும் ஞானிகள் நமக்கு சொல்லிகொடுத்த தியானமுறை மானசீகமானது.  மனதை மிகவும் திடமான நிலையில் நிலைநிறுத்தி இந்திரியங்கள் வழி செல்லாது நிறுத்தல், இந்திரியங்களை அவற்றின் இடங்களில் இருக்க செய்தல்.  தேகாத்ம புத்தியை கவனியாது விடுத்து, பிரம்மத்திடம் (ஆத்மாவை) மனதை ஒன்றுபடுத்தி இடைவிடாது ஆத்மாவை நினைத்தால் (தியானித்தல்).

     எப்பொழுதும் உனக்குள்ளேயே மன மகிழ்ச்சியால் பேரின்பம் அடைவாய் (மனனமற்ற நிலையை அடைவாய்) இதுவே சமாதி - வெற்றிடம், சூன்யம்) மதி மயக்கத்தால் இவ்வின்பத்தை அடைய முடியாது. 

     இந்த ஆத்மா தன்னோளியால் பிரகாசிப்பது, உலகையே கண் காணிப்பது, எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருப்பது, அர்த்த மற்ற இந்த உலகத்தினின்று முற்றும் வேறானதும் இதை இலக்காக வைத்துக் கொண்டு இடைவிடாது தியானித்தால், அதையே உன் உயிர் அறிவு சொருபமாக நினைவில் கொண்டால், அக அனுபவத்திற்கு வருகை தரும். 

     இந்த ஜோதி சொருபத்தை, ஆத்மாவை வேறு எண்ணம் குறுக்கிடாது, இடை விடாத நினைப்பாகிய தியானித்தால், அகமுகத்தில் தனது சொரூபமாக அறிந்து கொள்ள முடியும்.  

ஜீவாத்மா தரிசனம். 

     பரிசுத்தமான அந்தகரணத்தை, மனம், சித்தி, புத்தி, அகங்காரம் என்னும் இவைகளில் தனது மனதை ஆத்மரூபமான "சுயம்பூவில்" வைத்து அசைவிலாத நிலையில் மெல்லென துதி செய்தால் பரிபூரண ஜோதி தரிசனம் காணலாம். 

பாவம் - புண்ணியம்

     நல்வினை தீவினை என்று இருவகையால் சொல்லப்படும் கருவினில் தோன்றி வினைப்பயன் விளையுங்காளை, உயிர்களுக்கு மாபேரின்பமும், கவலையும் காட்டும்
                                       - மணிமேகலை 

     ஊழின் பெருவளி யாவுள மற்றொன்று
     சூழினும் தான் முந்துறும்
. - திருக்குறள் 

     ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர், நாழி (படி) முகவாது நானாழி - தோழி, நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம் விதியின் பயனே பயன். 

     அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் பருவத்தாலன்றி பழா
                                                                                            - மூதுரை

பரிகாரத்தின் கதி என்னவாகும்?

     மேற்படி ஞானிகள் ஊழ்வினைப் படியே உலக மக்கள் வாழ்க்கை நிர்ணயிக்கப் பட்டுள்ளதை கூறியிருக்கும் பொழுது பரிகாரத்தின் மூலம் தவிர்த்துக் கொள்ள முயல்வது மூட நம்பிக்கையாகும்.


     கடவுளின் மீது அன்பு செலுத்துங்கள்.  "அன்பே சிவம்".  அவன் தங்களின் ஐம்புலன் அறிவைக் கொண்டு மனதின் மூலம் மனிதனை வழி நடத்துக்கின்றான்.  ஆகையால் அறிவும் மனமும் நம் உடன்பிறந்த தெய்வமாகும் என்று உணர வேண்டும்.  மற்றவை குருமுகம் அறிதல்.

     உண்மை, உயிர், அறிவு, கடவுள் ஒருவன் இருக்கின்றான்.  அவனை சிந்தித்து ஆன்ம லாபமடைய மக்களுக்கு உதவுங்கள்.  அறிவான கடவுள் மனிததேகத்தில் விஞ்ஞானி ரூபத்தில் வெளிப்பட்டு மக்கள் முன்னேற புதுயுகத்தை படைத்துக் கொண்டு இருக்கின்றான் என்பதை உணர்த்த வேண்டுகிறோம்.

     ஆகவே செய்திதாள்களும், சின்ன திரை, பெரிய திரைகளில் வரும் கற்பனை காட்சிகளில் நம் நாட்டு பாமர மக்கள் அறியாமையிலும், மூடநம்பிக்கையிலும் அழுந்திவிடாமல் விழிப்புணர்வு செய்திகளும், படங்களும் வெளியிட்டால் நம் தமிழ்த்தாய் பெற்ற செம்மொழிக்கு அரியாசனம் அமைத்து கொடுத்த முழுமையான பங்கு தங்கள் அன்பு உள்ளங்களைத்தான் சாரும்.

     எந்த புராணக்கதையாக இருப்பினும் கதை முடிவில் அந்தக் கதையில் உண்மை கருத்தை, தத்துவத்தை கூறி முடிப்பது நலம், விளக்கவில்லை எனில் "கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம்தான் வளரும்" என்று உணர்கிறோம்.

     எல்லாம் வல்ல பரம் பொருள் நம் இதயத்தின் உள்ளேயே சோதியாக உள்ளது.  அதை அகக்கண்ணால் அறியலாம்.  இவ்வுலக உயிர்களாகிய நாம் ஒரு சூரியன், சந்திரன் கீழ்தான் உயிர் வாழ்கின்றோம்.  இதிலிருந்து நாம் உணர வேண்டியது என்னவெனில், நாம் எல்லோரும் சகோதரர்கள்.  ஆன்ம நேயத்துடனும், மனித நேயத்துடனும் ஒரு ஒளி சோதியின் கீழ் வாழ்வதை உணர்ந்து அனைவரும் அன்பாய் வாழ்ந்திடுவோம்.  தமிழ் தாய்க்கு உதவுங்கள்.

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" 
Next previous home
Related Posts Plugin for WordPress, Blogger...